Saturday, July 9, 2011

VITHI

விதி
------------

1985 -ம ஆண்டு
என்னுடன் மேட்டூர் மில்லில் வேலை பார்த்தவர் குண்டு ராவ் . ஸ்பின்னிங் பகுதியில்
பணியாற்றினார் .
என்னிடம் நன்கு பழகுவார் .
குண்டுராவுக்கு வயது 23 . கம்பனி கொடுத்திருந்த விடுதியில் தங்கி இருந்தார் .
இவருக்கு பூர்வீகம் மைசூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் . பூர்விக சொத்தாக
தோட்டம் ஒன்று உண்டு.
அவ்வப்போது அவருடைய குடும்பத்தை பற்றி பேச்சு வரும் .நானும் என்
குடும்பத்தை பற்றி சொல்வேன்.
இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர் . இவர் தான் கடைக்குட்டி .
இவருடைய சகோதரர்களின் கதையை இவர் கூறும் போது முற்போக்குவாதியான
என்னையே " அந்த விஷயம் " நிலை குலைய வைத்தது .
அடுத்தடுத்து , நடந்த அந்த நிகழ்வுகளை குண்டுராவ் எனக்கு விவரித்தபோது
உடம்பெல்லாம் புல்லரித்தது உண்மை.
அதற்கு அவர் சொன்ன காரணம் " எங்கள் குடும்பத்துக்கு,
" நாக தோஷமாக " இருக்கலாம் "- என்றார்.
அதாவது , இவருடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் ( நான்கு பேரும் )
ஏதாவது ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நாகப் பாம்பு தீண்டி , உயிரைக் காப்பாற்ற
முடியாமல் இறந்து விட்டனர்.
இத்தனைக்கும் இவர்களுடைய அப்பா ,அம்மா சொந்த ஊரிலேயே , தோட்டத்திலேயே
வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் .
அடுத்தடுத்து இடைவெளிவிட்டு , ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும்
அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது
எல்லோருமே கல்யாண வயதிற்கு முன்னமேயே விஷம் தீண்டி இறந்தனர்.
கடைக்குட்டியான குண்டுராவ் ,மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சொந்த
ஊருக்குச் செல்வார் .இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து விட்டு வருவார் .
குண்டுராவின் அப்பா , அம்மாவிற்கு ஏகப்பட்ட வேதனைகள் . வேண்டாத
தெய்வங்கள் இல்லை .
யார் என்ன சொன்னாலும் , எல்லா கோயில்களுக்கும் சென்று பரிகாரம் செய்வார்கள்.
லீவில் குண்டுராவ் வீட்டிற்குச் சென்றாலும், பெற்றோர் அவரை தோட்டத்துப்
பக்கமே அனுப்ப மாட்டார்கள் .இவர் விரும்பினாலும் அப்பா , அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள் .
இருப்பது ஒரு பிள்ளை . இவன் ஒருவனாவது , நமது குடும்பம் தழைக்க
கல்யாணம் செய்து , குழந்தை குட்டிகளுடன் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்கள்
ஒரு நாள் குண்டுராவின் வீட்டிலிருந்து கடிதம் வந்தது .
" வரும் திங்கட் கிழமை நீ கண்டிப்பாக ஊருக்கு வரவும் . உனக்கு பெண் பார்த்திருக்கிறோம்
வந்து பார்த்து விட்டு , உன் விருப்பத்தை தெரிவித்தால் , மேற்கொண்டு ஆவன செய்யலாம் "-
என அப்பா எழுதி இருந்தார் .
குண்டுராவை நாங்கள் எல்லாம் கிண்டல் செய்தோம் . " ஆகா , எங்களுக்கெல்லாம்
மைசூரில் பெரிய பார்ட்டி இருக்கிறது " - என ஆளாளுக்கு நக்கலடிதோம் .
அவருடைய முகத்தில் கல்யாண களை கட்டியிருந்தது .
அந்த நாளும் வந்தது . பெண் பார்க்கும் படலம் முடிந்தது . இவருக்கு பரம திருப்தி .
இவரை விட குண்டுராவின் அம்மாவிற்கு மிக்க சந்தோசம் .
தங்கள் குடும்பம் வாழையடி வழியாகப் போகிறது என பூரிப்பு .
அடுத்த வாரமே கல்யாண நாள் குறித்து , கல்யாண வேளையில் பிசியாக இறங்கி
விட்டார் .
குண்டுராவ் , கம்பனிக்கு ஒரு மாதம் லீவு சொல்லி விட்டார் .
எங்களுக்கு , போன் மூலமாக குண்டுராவ் விஷத்தை சொன்னார் . எல்லோரும் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - சொன்னோம்
மறு நாள் , முக்கிய வேலையாக மிசினில் பிரேக் டவுன் சரி செய்து கொண்டிருந்தேன் .
அப்போது ஒரு எலக்ட்ரிசியன் வந்து அந்த துக்க செய்தியைச் சொன்னான் .
" உங்கள் நண்பர் குண்டுராவ் இறந்துவிட்டதாக கம்பனிக்கு டெலி கிராம் வந்துள்ளது !".
எனக்கு சிறிது நேரம் கண்ணெல்லாம் இருட்டாகி விட்டது மாதிரி தோன்றியது.
அப்படியே ஒரு ஐந்து நிமிஷம் கிழே அமர்ந்து விட்டேன் ,
. பிறகு ஆபிசுக்கு ஓடினேன் .குண்டு ராவின் சக ஆபிசரும் அந்த துக்க செய்தியை உறுதி செய்தார் .
கம்பனியிலிருந்து அவருடைய விட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம் .

நடந்தது இது தான் .
பெண் பார்த்துவிட்டு சென்ற மூன்றாம் நாள் , கல்யாண அழைபிதலை எடுத்துக் கொண்டு
மொபெட் - ல் நண்பர்களுக்கு கல்யாணத்திற்கு அழைக்கச் சென்றிருக்கிறார் .
இத்தனைக்கும் குறைந்த வேகத்திலேயே சென்றிருக்கிறார் .
ஒரு திருப்பத்தில் இவருடைய மொபெட் மீது இவருக்கு எமனாய் வந்த ஒரு லாரி
மோதியதில் பரிதாபமாக அதே இடத்தில இறந்து விட்டார் .
இது என்ன சோதனை ?
குடும்பத்தில் எல்லா சகோதரர்களுக்கும் நிகழ்ந்த மாதிரி நாக தோஷமும் இவருக்கு
ஏற்படவில்லை. குடும்ப வாரிசுகள் அனைவரும் மறைந்தது எதனால் ? ஏன் ?
இன்னும் புலப்படவில்லை !

----------------------------------------------------------------------------- Download As PDF

No comments:

Post a Comment