அவள் , மயில் , வானவில் .
----------------------------------------------------
நேரான வானவில் வளைந்தது அவள் புருவம் பார்த்து ,
ஒரு நிறம் ஏழு நிறமானது அவள் பார்வை பட்டு ,
அன்னம் போல் செல்லும் அவள் பின்னால் நடைபயிலும் ,
மயிலும் வானவில்போல் தோகை விரித்து நிறம்காட்டும்.
வானத்தில் சூரிய ஒளிக்கற்றில் மழையின் அறிகுறி ,
காட்டில் மயில் கூவி தரும் வானிலை அறிவிப்பு ,
ஜன்னல் வழியே வானைப்பார்த்து , மழையை எதிர்நோக்கி ,
காத்திருக்கும் என்னவள் மழையில் நனைய ஆனந்தம் .
மழை வந்து அவள் நனையக்கண்டேன் ஆனந்தத்தில் ,
மயிலும் அவள்கூட ஆடக்கண்டேன் பேரின்பத்தில் ,
இதைப்பார்த்து மறையத் தொடங்கியது வானவில் பொறாமையில் ,
வானவில்லைக் காணாது அவள் ஆட்டம் நின்றது அதிர்ச்சியில் .
மயிலும் தன் தோகை சுருக்கி ,ஆட்டம் நிறுத்தி ,
அவள் ஆட்டம் நிறுத்திய காரணம் , வானவில் என அறிந்து ,
இருவரும் வானத்தைப் பார்த்து , வராத வானவில்லை எதிர்பார்த்து ,
துயிலில் ஆழ்ந்தனர் அவளும் மயிலும் , கனவில் வானவில்!
----------------------------------------------------------------------
--
Download As PDF
No comments:
Post a Comment