Friday, July 15, 2011

paalavam-solaivanam

பாலைவனம் சோலை வனமானது அரபு நாட்டில்,
தண்ணீரால் அல்ல, எரிபொருளால்.....!
சோலை வனம் பாலைவனமாகிடுமோ நம்நாட்டில்..?!
மணலால் அல்ல, விவசாயியின் கண்ணீரால்.....!

நாளொரு மேனியாய், விவசாயிகள் பிரச்சினை....!
கவலை கொள்வோர், கண்டுகொள்வோர் யாருமில்லை,
புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை...
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது...?

நாட்டின் முதுகெலும்பு விவசாயி..! சொல்றாங்க தெரியுமா...?
முதுகெலும்பு இல்லா நாடுதான் நி(ற்க)லைக்க முடியுமா...?
சோகத்தில் புலம்பினான் ஒரு விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது மழை..!

இதோ புலம்புகிறான் இன்னொரு விவசாயி..
நெஞ்சம் கனத்து ஏங்கிப்போகிறது,
நிம்மதியாக உறங்குவதுக்காவது,
ஆறடிநிலம் கிடைக்குமா? என்று...!.

அரசே வேண்டாம் இந்த விஷப்பரீட்சை !
உடனடி தேவை, வேளாண் அறுவை சிகிச்சை...!
விளைநிலங்களை துண்டிடும்.....
தலைகள் தண்டிக்கப்படவேண்டும்....!

மானியத்தில் அரசு தரவேண்டும் விதைநெல்,
தரகர் இன்றி வேண்டும் நேரடி கொள்முதல்,
தடையில்லா மின்சாரம்....,
விளைச்சலுக்கு மதிப்பீடு.....!

ஆம் இனி நம் மனமெங்கும் நந்தவனம்

-அன்புடன்
முத்து ரத்தினம்

Jul 14, 2011 Download As PDF

No comments:

Post a Comment