இனி ஒரு சுதந்திரம் .
-------------------------------------
வீட்டுக்கு வீடு இலவச டீவி பார்!
சீரியல் பார்த்து சீர் கெட்ட மாந்தர்
மாலை களைப்புடன் வீடு வரும் பதிக்கு
கெட்ட சினிமா பல கண்டு மோகம்
தலைக்கேறி , கலைச் சேவை நான் புரிய ,
ரயிலேறி சென்னைக்கு உடன் புறப்பட்டேன் தனியே !
வயது பதினாறு, வழி தவறி வந்து விட்டேன் ,.
சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்து விட்ட எனக்கு ,
ஜெமினிக்கு வர வழி தெரிய வில்லை !
என்னே கொடுமை ! நான் நிற்பதோ முட்டுச்சந்து ,
என்னைச் சுற்றி நால்வர் , நானோ கால்பந்து !
நிலை தடுமாறி நின்றேன் ,யார் தருவார் அபயம் ?
போதை தடுமாறி நின்ற காமுகர் ,டாஸ்மாக் உபயம் !
பெண் தனியே சுதந்திரமாய் வருவது எப்போது ?
காந்தி வாங்கிய சுதந்திரம் எங்கே தேடுவேன் ?
இனி ஒரு சுதந்திரம் யார் தருவார் ?
Download As PDF
No comments:
Post a Comment