நேசம்
--------------
( முத்து ரத்தினம் )
இங்கு சாலை வசதியையும் , கார்கள் செல்லும் வேகத்தையும் கண்டு
பிரமித்தான் , துரைராசு.
கார்களின் வேகம் சுமார் 120 கி. மீ . இருந்து 150 கி . மீ.வரைக்கும் . டிரக்குகள் 100 கி .மீ.
வேகத்தில்.!
அடேயப்பா ! இது இந்தியாவின் எந்தவொரு ஊரிலும் அல்ல ! துரைராசு இருப்பது
சவுதி அரேபியாவில் !
ஜித்தாவிலிருந்து முன்னூறு கி. மீ. தொலைவிலுள்ள முத்தலீப் என்ற ஊர்.
இரண்டு வருடம் முன்பு தான் இங்கு வந்து சேர்ந்தான். வந்த புதிதில்
துரைராசுவுக்கு ஏகப்பட்ட பிரமிப்பு.!
அது ரியாத் விமான நிலையத்தில் ஆரம்பித்து, ஜித்தா விமான நிலையம் ,
மற்றும் வித விதமான அமெரிக்க , ஜப்பான் கார்களின் அணி வகுப்புவரை நீண்டது.
டிப்ளோமா சிவில் முடித்து , ஹை -வேசில் வேலை வேலை பார்த்துகொண்டிருந்த
துரைராசுவுக்கு எதிர்பாராத விதமாக சவுதி அரேபியாவில் சாலை பராமரிக்கும்
பணியில் சூபர்வைசர் வேலை கிடைத்தது.
நல்ல சம்பளம் . உடனே கிளம்பி வந்து விட்டான் .
இவனோடு பணியில் இரண்டு பாகிஸ்தானியர்கள் , ஒரு எகிப்து நாட்டவரும் ,
இரண்டு பங்களாதேஷ் நாட்டவரும் இருந்தனர்.
ஆரம்பத்தில் இந்தி, மற்றும் அரபி மொழி பிரச்சனை இருந்தாலும்
,சிறிது நாளில் பேசக் கற்றுக்கொண்டான் . அனைவரும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்
போல் பழகினார்கள்.
இவன் ஒருவன் மட்டுமே இந்துவாக இருந்தாலும் , மற்றவர் இவனை ஒரு
சகோதரன் போல பாவித்து வந்தார்கள்.
இதில் சப்தார் என்ற பாகிஸ்தானியும் , துரைரசுவும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டனர் .
மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போதும் , கடைகளுக்கு செல்லும் போதும்
இருவரும் சேர்ந்தே செல்வார்கள் .
அப்போது சமீபத்திய இந்தி சினிமாவிலிருந்து , தற்போதைய இந்திய ,பாகிஸ்தான்
நடப்புகள் அனைத்தையும் அலசுவார்கள் ,
.
டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் நல்ல மழை . இதனால் சாலை ஓரங்களில் மண்
அரிப்பு ஏற்பட்டு , பத்து கி. மீ. தூரத்துக்கு சாலை பழுதடைந்து விட்டது.
சாலை ஓரத்தில் " மெதுவாகச் செல்லவும் " -போர்டுகளையும் சிவப்பு
வர்ணம் அடிக்கப்பட்ட முக்கோண கூம்பு போன்ற பிளாஸ்டிக் ஸ்டாண்டுகளையும்
வைத்துவிட்டு , ஆட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ,துரைராசு .
அப்போது தான் , யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த விபத்து நடந்தது.
120 கி. மீ . வேகத்தில் வந்த கார் ஓன்று , பிளாஸ்டிக் ஸ்டாண்டில் மோதி ,
பிரேக் பிடித்தும்,கண்ட்ரோல் இல்லாமல் , சாலை அருகில் நின்று கொண்டிருந்த
துரைராசுவின் மீது மோதியது .
இருபதடி தூரம் தூக்கி எறியப்பட்ட துரைராசு , பெருமளவு ரத்தம் வெளியேறி
,சுய நினைவு இழந்தான் ,.
கூட இருந்தவர்கள் , துரைராசுவை , கம்பெனி காரில் , மருத்துவ மனைக்கு கொண்டு
சென்றார்கள் .
உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது, துரைராசுவுக்கு.
உடன் இருந்த அனைவரும் ரத்தம் தர தயாரானார்கள் .
துரைராசுவின் நண்பன் , சப்தாரின் ரத்தம் ஒரே குரூப்பாக இருந்ததால் , துரைராசு
பிழைத்துக் கொண்டான் .
மயக்கம் தெளிந்த துரைராசு , கண்ணில் நீர் பெருக சப்தாரை தழுவிக் கொண்டான் .
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் ரத்தத்தால் , அன்பால் இந்து, முஸ்லிம் மட்டும்
இணையவில்லை. இந்தியாவும் , பாகிஸ்தானும் தழுவிக் கொண்டதைப் போல இருந்தது !
Download As PDF
No comments:
Post a Comment