வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-4
பிறகு அதை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் வெளிநாட்டு வங்கியில் காசோலை மற்றும் கடவுச் சீட்டு, விசா, work permit நகல் இவற்றை புகைப்படத்துடன் இணைத்து வங்கிக்கு அனுப்பினால், வங்கியிலிருந்து உங்கள் முகவரிக்கு வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம் வந்து விடும்.
நீங்கள் மாதா மாதம் அனுப்பும் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.
உங்கள் குடும்பத்திற்குத் தேவையான பணத்தை செக் அனுப்பினால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
நீங்கள் வங்கி மூலம் அனுப்பும் பணம் அனைத்தும் ரிசர்வ் பேங்க் கண்காணிப்பில் தான் உங்கள் வங்கிக்குச் செல்கிறது.
அதற்குண்டான அந்நியச் செலாவணி நம் அரசுக்குக் கிடைக்கிறது.
எனவே தான் வெளிநாடு வாழ் இந்தியருக்கு இந்திய அரசு பல சலுகைகளை அறிவிக்கிறது.
நாம் எவ்வளவு கால ம் வெளிநாட்டில் பணி செய்து சம்பாதிப்பது என்பது முக்கியமல்ல.
சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் சேமித்து, பயனுள்ள பிற்கால வாழ்விற்கு செலவு செய்யவேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியருக்காக மூன்று வகையான வங்கிக் கணக்குகளை துவக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
1) NON-RESIDENT (EXTERNAL) RUPEE ACCOUNTS (NRE ACCOUNTS)
மேற்கண்ட வங்கிக் கணக்கில் வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றி நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதிலும் (சேவிங்ஸ்) சேமிப்பு, (கரண்ட்) நடைமுறை மற்றும் வைப்புத் தொகை கணக்குகளை வைத்துக் கொள்ளலாம்.
நாம் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.
மேலும் இந்த வங்கிக் கணக்கை, வெளிநாட்டு நாணய கணக்காக (FCNR) (FOREIGN CURRENCY NON-RESIDENT ACCOUNTS) மாற்ற வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
2) ORDINARY NON-RESIDENT ACCOUNTS (NRO ACCOUNTS)
இந்த வங்கிக் கணக்கிலும் இந்திய ரூபாயாக வரவு வைக்கப்படும். இந்தியாவில் வாழும் ஒருவருடன் சேர்த்து கூட்டு (JOINT ACCOUNT) கணக்காக வைத்துக் கொள்ளலாம்.
இந்த கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு வரும் வட்டியானது வரிக்கு உட்பட்டது. NRO ACCOUNT கணக்கில் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.
3) FOREIGN CURRENCY NON RESIDENT (BANK) ACCOUNTS. (FCNR (B)ACCOUNTS)
இந்த வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றி அனுப்ப முடியாது.
வெளிநாட்டு நாணயங்களான யு எஸ் டாலர்கள், ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், ஜப்பானிய யென், யூரோ, கனடா டாலர்கள் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்களாக மட்டும் அனுப்ப முடிகிற வங்கிக் கணக்காகும் இது.
தற்போது ரிசர்வ் வங்கி ஐந்து வருடங்கள் வரையிலான வைப்புத் தொகையாக இந்த கணக்கில் அனுமதிக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியருக்கான தகுதி உள்ள வரை இந்த கணக்கில் வைத்துள்ள தொகையின் வட்டிக்கு வரி கிடையாது.
.......தொடரும்

No comments:
Post a Comment