பொருத்தம் ( முத்து ரத்தினம் )
- --------------------
வரும் ஐப்பசியில் என் மூத்த மகனுக்கு கல்யாணம் .
ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அழைப்பிதல் கொடுக்க ஆரம்பித்து விட்டேன் .
யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு , நானும் என் மனைவியும்
தனித்தனியாகவும் , சேர்ந்தும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சேர்ந்தும் சென்று
பத்திரிக்கை கொடுத்து வந்தோம் .
பட்டியலில் என் விருப்பத்திற்கு ஒரு முக்கியமான நபரை , கல்யாணத்திற்கு
கூப்பிடலாம் என என் மனைவிடம் கேட்டேன் .அவர் வேறு யாருமல்ல .!
என் முன்னாள் தெய்வீக காதலி அமுதா !.
என் மனைவிக்கும் இது தெரியும் . பள்ளியில் என் மனைவிக்கு ஒரு வருட சீனியர் .
இங்கு நான் தெய்வீகம் என குறிப்பிடுவது எதனால் என்றால் , இந்த காலம் போல்
கண்டதும் காதல் , மறுநாள் டேடிங் என்பதெல்லாம் அந்த காலத்தில் இல்லை .!
நான் என் காதலியை தொட்டது கூட கிடையாது .
பேசுவதே இரண்டடி தள்ளி நின்று தான் பேசுவோம் .
அப்போது கூட , அமுதாவின் அக்காக்கள் இருவரில் யாரோ ஒருவர் உடன் இருப்பார்கள் .
என்னடா , காதலித்தவளை விட்டு விட்டு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டானே
என அமுதா கலங்கவில்லை .
உள்ளுக்குள் வருத்தமிருந்தாலும் , அதை வெளிக்காட்டவில்லை .!
எப்போது ஊருக்கு வந்தாலும் வீட்டுக்கு வந்து , நலம் விசாரித்து விட்டு போவாள் .
கடந்த நாலைந்து வருடங்களாக ஊர் பக்கம் வருவதில்லை .
தற்போது அமுதா ஓமலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக
கேள்விப்பட்டு , அவள் அக்காவிடம் முகவரி வாங்கி வைத்திருந்தேன் .
ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும், என் மனைவியும் காலை ஓமலுருக்கு
கிளம்பத் தயாரானோம் .
வாசலை அடைந்து கதவைப் பூட்டிக் கொண்டிருந்தாள் என் மனைவி .
அப்போது வாசலருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது .
ஆட்டோவிலிருந்து அமுதா இறங்கி வந்து கொண்டிருந்தாள் . எங்களுக்கோ
சொல்ல முடியாத ஆச்சரியம் !
" அக்கா , இப்பதான் உங்க வீட்டிற்கு வருவதற்கு கிளம்புகிறோம் , அதற்குள்
நீங்களே வந்து விட்டீர்கள் !-" என என் மனைவி அமுதாவை வரவேற்று
வீட்டிற்குள் அழைத்துப் போனாள்.
" ரொம்ப நாளைக்குப் பிறகு அமுதாவைப் பார்க்கிறேன்.
அமுதாவிற்கு முதுமை கூடியிருந்தது . அவளுக்கும் இரண்டு குழந்தைகள் .
தான் கொண்டு வந்திருந்த கைப் பையில் இருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து
என்னிடம் நீட்டி " ஐப்பசி மாசம் 14 - ம தேதி என் மூத்த மகளுக்கு கல்யாணம் .
நீங்கள் இருவரும் அவசியம் வர வேண்டும் .
என்ன ஒற்றுமை ! அதே நாளில் தான் என் பையனுக்கும் கல்யாணம் !
என் மனைவி அதை அமுதாவிடம் சொல்லிய போது , " ரொம்ப சந்தோசம் ,
அதனாலென்ன என் மகளுக்கு கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் என் மகளையும் ,
மருமகனையும் அழைத்து வருகிறேன் , அப்பா நான் வரட்டுமா ?
மனதில் வருத்தமிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன்
புறப்பட்டாள் , அமுதா .
-----------------------------------------------------------------------
Download As PDF
No comments:
Post a Comment