மனித நேயம்
---------------------------
1945 -ம ஆண்டு .
ஜப்பானின் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டு .
இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்க நாடானது , ஜப்பானை அடி பணிய வைக்க சீனா , மற்றும் uk நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து , ஜப்பானின் ஹிரோஷிமா , மற்றும் நாகசாகி நகரங்களின் மேல் அணுகுண்டு வீசி தாக்கியது .
அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பாதிப்பு மனித வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத வடு ஆகி விட்டது . உலக மக்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர் .
ஆகஸ்ட் , 6 , 1945 , மற்றும் ஆகஸ்ட் 9 , 1945 ,-ம ஆண்டு இருமுறை ஹிரோஷிமா நாகசாகி நகரங்களை அணுகுண்டு தாக்கியது .
ஹிரோஷிமாவை தாக்கிய அணுகுண்டு " லிட்டில் பாய் "- நாகசாகியை தாக்கிய அணுகுண்டு "fat man" -
இதனால் ஹிரோஷிமாவின் மக்கள் தொகை இழப்பு -90000 -லிருந்து 166000 வரையிலும் ,
நாகசாகியின் மக்கள் தொகை இழப்பு - 60000 -லிருந்து 80000 வரையிலும் என கணக்கிடப்பட்டுள்ளது .
அணுவின் கதிர் வீச்சால் பின்னால் ஏற்பட்ட பாதிப்பு வேதனைக்குரியது .
கான்சர் ,மற்றும் லுக்கும்யா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் .
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் , அத்தனைக்கும் ஈடு கொடுத்து , குறுகிய
காலத்தில் , தன் உழைப்பால் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ஜப்பான் .
அதி நவீன எலக்ட்ரிகல் , எலக்ரானிக் பொருட்களில் நம்பர் ஒன் -ஆக விளங்கியது ,ஜப்பான் .
அது மட்டுமல்ல , உலக நாடுகளில் மோட்டார் உற்பத்தியில் முதல் தரமாக விளங்கி வந்தது .
இன்று இரண்டாம் உலகப் போருக்குப்பின் இயற்கையின் சீற்றத்தால் சுனாமி ,
மற்றும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு , 1945 -ம ஆண்டைப் போலவே 2011 - ம் ஆண்டும்
ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக மாறிப் போனது .
பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ,.
சுனாமி , பத்து மீட்டருக்கும் உயரத்தில் அலைகள் மூலம் தன் சீற்றத்தை காண்பித்து ஜப்பானை அழித்தது.
நில அதிர்வும் 8 .9 ரிக்டர் ( magnitude ) அளவில் பாதித்து அழிவை ஏற்படுத்தியது .
அது மட்டுமல்ல ! இச் சீற்றத்தில் ஜப்பானிலுள்ள மிக முக்கிய அணு உலைகளில ஏற்பட்ட கசிவால் , மூன்று இலச்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் .
இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் ,
இரண்டாம் உலகப் போரில் எந்தெந்த நடுகல் ஜப்பானின் மீது விரோதம்
கொண்டு , அணுகுண்டு வீச்சால் ,ஜப்பான் மக்களை அழித்ததோ,
அதே நாடுகளான சீனா , அமெரிக்கா, மற்றும் uk ஆகியவை ,
தங்கள் பங்காக பாதுகாப்பாக ராணுவ வீரர்களையும், உபகரணங்களையும்
மற்றும் அணு உலைகளில் ரியாக்டர் (reactor ) மூலம் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க கூலன்ட்களை ( coolant ) அனுப்பி உதவி செய்தது ,.
உணவு ,மற்றும் போர்வைகளையும் அனுப்பி வைத்தது .
இதில் ஆப்கானிஸ்தானும் தன் பங்குக்கு $ 50000 அனுப்பியது .
மனித நேயம் இன்னும் உயிரோடு தான் உள்ளது .
விரைவில் ஜப்பான் தலை நிமிர்ந்து நிற்கும் ! சந்தேகமில்லை .!
Download As PDF
No comments:
Post a Comment