சேது சமுத்திர கால்வாய்த் திட்டம்
----------------------------------------------------------
(முத்து ரத்தினம் )
" சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் ,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "
இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல , நூற்று ஐம்பது ஆண்டு கால
தமிழர்களின் கனவாகும்.
இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய் (canal ) அமைக்கும்
திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A . D . TAYLOR
என்பவர் . ஆண்டு 1860 .
அதற்குப் பிறகு திரு . ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955 - ம் ஆண்டு
திரு . ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து , திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது .
அடுத்தடுத்து ,
1961 - ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் சேது
சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு , பின்னர் கைவிடப்பட்டது .
1968 -ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் அடுத்த
திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது .
1996 - ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம்
திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது .
பிறகு , தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது .
முடிவாக ,
தற்போதைய , தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா , பாக் - ஜலசந்தி வழியாக
சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம் , செயல் ஆக்கத்திற்கு முடிவானது .
இத் திட்டத்தின் பலன்கள்
-----------------------------------------------
இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக
பலன் அடையும் .
வருடந்தோறும் , இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர
கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது .
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும் .
தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர் , நாகப்பட்டினம் , தொண்டி, கொளச்சல் , கன்யாகுமரி
போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும் .
வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள் வந்து கொண்டு
உள்ளன .
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின் படி , சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு -
இலங்கையைச் சுற்றி வருவது குறையும் . நேரமும் கணிசமாகக் குறையும்
இத் திட்டத்தின் பாதகங்கள்
--------------------------------------------
சேது சமுத்திர நவீன திட்டத்தின் படி , கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள்
, அதிக பட்சமாக முப்பதாயிரம் (௩௦௦௦௦) டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும் .
ஆனால் , தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள் , மற்றும் சரக்குகள் எடை
அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன .
இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய வழியில்லை .
உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட்- மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி
ஒன்றை விடுத்துள்ளார் . அதாவது ,
" தற்போதைய சேது சமுத்திர வழி , தெற்கு கேரளாவை ,சுனாமி தாக்கும் அபாயம்
உள்ளது " -என எச்சரித்துள்ளார் ,
தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும்
கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும் , கிட்டத்தட்ட வருடத்திற்கு
150 கோடி ( 1 .5 பில்லியன் ) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , விலை மதிக்க முடியாத " தோரியம் " - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது .
ஏனென்றால் , நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான " தோரியம் "-
நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும் .
மொத்தத்தில் , முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும் , பாரதி
கண்ட கனவை நினைவாக்க , அரசு ஆவன செய்ய வேண்டும் .
அதுவே , தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம்
Download As PDF
No comments:
Post a Comment