Saturday, July 9, 2011

TEST TUBE BABY

                              சோதனைக் குழாய் குழந்தை (   முத்து ரத்தினம் )
                                               -----------------------------------------------

             காவிரியைக் கமண்டலத்தில் அடக்கி வைத்தார் அகத்தியர் ,
             குடுவையில் அவதரித்து , கலயத்தில் பிறந்த கும்பசம்பவர் ,
             உலகின் முதன் சோதனைக் குழாய் குழந்தை என்றானவர் ,
             அறிவியல் சோதனைக்குழாய் குழந்தைக்கு வித்திட்ட குடமுனி.

             கல்லுக்கு உயிர் கொடுத்து சிலைஆக்கினர்  பல்லவர் ,
            கனவிலே குடும்பம் நடத்தி குழந்தை பெற்றனர் காதலர் ,
            கருவை சோதனைக் குழாயில் உருவாக்கினர் மருத்துவர் ,
            கடவுளுடன் போட்டி போட்டு உயிரை படைத்தனர்.

            கருவும் உயிர் பெற பெண்ணின் கருப்பை வேண்டும் ,
          பத்துமாதம் சுமந்து , உலகைப் பார்க்க தாய்மை வேண்டும்,
          உயிர் வளர ரத்தத்தைப் பாலாக்கி தர வேண்டும் .
,         மலடி என்றவர் வாய்மூடி மௌனமாய் நிற்க வேண்டும் .

          சோதனைக்குழாய் குழந்தைக்கு சோதனை வருவது எப்போது ?
          கல்வி கற்க பள்ளிக்குச் செல்வாய் அப்போது .
          அதோ அதுதான் டெஸ்ட்  tube  பேபி என்பர் ,
         வளர்த்தாலும் எல்லோருக்கும் அது குழந்தை தான்.!


                                         ------------------------------------------------------------ Download As PDF

No comments:

Post a Comment