வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-6
பணி ஒப்பந்தம் முடித்து EXIT-ல் வரும் போது கவனிக்க வேண்டியது;
இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ உங்களுடைய தேவையில்லை என திருப்பி அனுப்புகிறது என வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் கடவுச் சீட்டில் EXIT-முத்திரை இடப்பட்டு இந்தியாவுக்கு வருகிறீர்கள்.
நீங்கள் என்ன என்ன பொருட்கள் கொண்டு வரலாம் என்பதை 'INDIA CUSTOMS RULES FOR TRANSFERRING RESIDENCY TO INDIA'-என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
நாம் வெளிநாட்டில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்களை 'கார்கோ' (Cargo) மூலம் இந்தியா கொண்டு வரலாம். இதற்கு கஸ்டம்ஸ் DUTY கிடையாது.
மற்றும் நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று மறுபடியும் அதை இந்தியா கொண்டு வர விரும்பினால், மறக்காமல் அந்த பொருட்களுக்கான EXPORT CERTIFICARE'-ஐ கஸ்டம்ஸ்-லிருந்து பெற்றுச் செல்லவேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் இந்தியா திரும்பும்போது அந்த பொருட்களுக்கு திரும்பவும் DUTY கட்ட வேண்டி வரும்.
PRAVASI BHARTIYA BIMA YOJANA, 2006
குறிப்பாக வேலை வாய்ப்புக்காக அயல் நாடு செல்லும் இந்தியர்களுக்காக கட்டாய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (INSURANCE) அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
அதன் பெயர் 'பிரவசி பாரதிய பீமா யோஜனா' என்பதாகும். (PRAVASI BHARATIYA BIMA YOJANA) (PBBY)
குறைந்தபட்ச தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் நாம் வேலை ஒப்பந்தம் செய்த காலம் முழுவதற்கும் சேர்த்து பயன் பெறலாம்.
2003ஆம் ஆண்டு இந்தத் தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 1, 2006 முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது.
இத்துடன் ரூ.25,000-க்கும் சேர்த்து கூடுதலாக சட்ட உதவி செலவுகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.
1) ஒரு வேளை காப்பீடு செய்தவர் இறந்து விட்டால், அவர் குறிப்பிட்ட நபருக்கு (NOMINEE) ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். அல்லது காப்பீடு செய்தவர் பணியின்போது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனம் அவருக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.
2) இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர ஒரு வழி வான ஊர்தி செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். உடலுடன் உதவியாளர் ஒருவருக்கும் வரும் செலவை நிறுவனம் ஏற்கும்.
3) பணியிலி இருப்பவரை அவர் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், ஒரு வழிப்பாதை எகானமி பிரிவு விமான பயணச்சீட்டுக்கான தொகையை காப்பீடு செய்தவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு அந்நாட்டின் இந்தியத் தூதரக சான்றிதழ் தேவை.
4) பணியில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது மருத்துவ சோதனையில் அவரால் இனி பணியில் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ மற்றும் காப்பீடு எடுத்த 12 மாதத்திற்குள் வெளிநாட்டு பணி நிறுவனம் பணி நீக்கம் செய்தாலோ, மேற்கண்ட ஒரு வழிப் பயணச்சீட்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செய்தவருக்கு வழங்கும்.
5) இந்த காப்பீடு குறைந்தது இரண்டு வருடம் அல்லது வேலை ஒப்பந்தம் காலக்கெடு இதில் எது அதிகமோ அதுவரை செல்லுவடியாகும்.
6) பணியின்போது விபத்து, உடல் நலக்குறைவு, வியாதி இவற்றுக்காக மருத்துவமனையில், மருத்துவம் எடுத்துக் கொண்டால், மருத்துவத் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- காப்பீட்டு காலத்தில் இந்தியாவில் இருந்தாலும், அயல் நாட்டில் இருந்தாலும் காப்பீடு செய்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
7) வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ பேறுக்காக ரூபாய் இருபதாயிரம் (20,000) காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இதற்கும் அந்நாட்டு இந்திய தூதரக சான்றிதழ் தேவை.
8) வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு (21 வயதிற்குள்) மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் 25,000 (இருபத்தைந்தாயிரம்) பெற்றுக் கொள்ளலாம். (வருடத்திற்கு)
இறந்தவர் அல்லது நிரந்திர ஊனமுற்று இந்தியா திரும்பிய பணியாளர், காப்பீடு செய்தவருக்குத்தான் மேற்கண்ட சலுகை கிடைக்கும்.
காப்பீட்டு நிறுவனங்கள் எவை என பார்ப்போம்.
1) ஐசிஐசிஐ லம்போர்டு இன்சூரன்ஸ் கம்பெனி
2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
3) ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
4) நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
5) ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
6) நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி
7) சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
8) பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் பெறலாம்.
.....தொடர்வது
சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும். அதுகுறித்து பார்ப்போம்.

No comments:
Post a Comment