Tuesday, July 26, 2011

KARUPPUP PANAM

பணம் என்ற ஒன்று இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்ட மாற்று முறையே சிறப்பு!.
பருப்பு கொடுத்து புளி வாங்குடா தோழா,
நாட்டில் பட்டினி என்ற சொல் இராது பாரடா..!
    
வங்கி எண்ணிக்கை குறையும் பணம் போட,
கிடங்கி எண்ணிக்கை உயரும் தானியம் போட.
விளைச்சலால் தானே நாட்டில் எங்கும் பசுமை,
விலைவாசியும் குறையும் என்பது இனிமை.
    
ஆண்டி ஆவர், ஹவாலா கும்பல் விழிபிதுங்கி,
திவாலாகி போண்டி ஆவர், சுவிஸ் வங்கி !
வெள்ளை, கறுப்பானது  கயவர் மடமை,
கறுப்பை,வெளிக்கொணர்வது அரசின் கடமை.!

அன்னிய கடனில் மூழ்கி நிற்கும் டைட்டானிக்,
நம் நாடு நீர்மூழ்கி கப்பலாகி மூச்சு விடுவது,
நல்லவர் சிலர் நாட்டின் தூண்களாய் இருப்பது !
வல்லரசு தேவை, வேண்டும் முதலில் நல்லரசு

பணம் இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்டமாற்று முறையே சிறப்பு!.
விளைச்சல் கொடுத்து பொருளை வாங்குடா நண்பா,
மன உளைச்சல் இன்றி வாழுடா தெம்பா..!

பணம் பத்தும் பேசும்...
பண்டாமாற்று பத்தையும் தாண்டி பேசும்...!
பொருளுக்கு பொருள் தேடி கொடு.
இருளுக்கு வழி சொல்லி விரட்டிவிடு...!

-முத்து ரத்தினம்
Download As PDF

No comments:

Post a Comment