Friday, March 8, 2013

தளவாய் சுந்தரம்: தொடர்புக்கு

தளவாய் சுந்தரம்: தொடர்புக்கு: மின்னஞ்சல் முகவரி: dhalavai@aol.in Download As PDF
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஅவசரத் தீர்மானம்.. மிரள.. பிரளயம்
இன்பசுதேந்திரன்
red pointநானிலத்தை அழகூட்டும் வனப்பேச்சி
க. உதயகுமார்
red pointபரம்பரை நோய்
நீச்சல்காரன்
red pointகாலம் அவளை.. மழையில் நனையாமல்
வேலணையூர்-தாஸ்.
red pointவீட்டில் எண்ணெ.. முற்றுப்புள்ளி..ஒரு கொடி
வித்யாசாகர்
red pointசொல்லித் தீராத சங்கிலி
எம்.ரிஷான் ஷெரீப்
red pointபத்மினி சாகுமளவிற்கு உன்னை
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
red pointவானம் உமிழ்கிறது..காதல் கொண்ட
கிருஷ்ணா, யாழ்ப்பாணம்
red pointஅன்னை.. பால்யகால சினேகிதி
க. பழனிவேல், ஜெயங்கொண்ட சோழபுரம்
red point2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை
ரவி (சுவிஸ்)
red pointகர்த்தாவே!.. சோல்ஜர்.. யுத்தசாட்சி
மன்னார் அமுதன்
red pointபுரிந்தால் சொல்வீர்களா?
சத்தி சக்திதாசன்
red pointஏன் இந்த பாராமுகம்?. வறுமை.. விதி
இரா சனத், கம்பளை
red pointசில மனிதர்கள் இருக்கிறார்கள்
நமுனை ஸமான்
red pointஅச்சம் எனும் பேய்.. பரதேசி.. கனவு
சிவப்பிரகாசம்
red pointகடவுளுக்கு வந்த சோதனை
மு.கோபி சரபோஜி.
red pointமரணம்.. ஓய்வில்லாவேலை..வீடு
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointமுதுகெலும்பற்றவன்.. துரோகத்திற்கு முந்து..
மகரந்தன்விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றனredangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures
 

வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-04-28 


picture for poem
நிலவில்..ஏன்?.. கறுப்புப் பணம்.
முத்து ரத்தினம்நிலவில் நான்.. ஏன்?.. கறுப்புப் பணம்


01.
நிலவில் நான்
-------------------

எனக்கொரு இடம் வேண்டும் அந்த நிலவில்,
நிற்கக்கூட இடமில்லை இந்த பூமியில்.
தேய் பிறையில் வருவேன் இங்கு விடுமுறையில்,
வளர் பிறையில் செல்வேன் அங்கு இன்பக்களிப்பில்.

பாட்டி வடை சுட்ட கதை ஒன்றுண்டு அந்நாளில்,
நாயர் டீ கடை உண்டு நிலவில் இந்நாளில்.
நிலாச்சோறு உண்டு மகிழ்வோம் பௌர்ணமியில்,
மாதமொருமுறை விடுப்பு அவசியம் அமாவாசையில்.

ஜாதி, மத பேதமின்றி அனைவரும் குடியேறுவோம்,
உலகின் "மாதிரி" சமத்துவபுரம் அங்கு அமைப்போம்.
ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இயற்றுவோம்,
தன்னலமற்ற தலைவர் பலரை உருவாக்குவோம்.02.
ஏன்?
-------

என் விழியிரண்டும் மூட மறுக்குது, ஏன்?
என் எதிரில் நீ இருந்தால்!
மூடினாலும் தூக்கம் வர மறுக்குது, ஏன்?
என் எதிரில் உன் பிம்பம்!.

சாவை கூட என் மனம் ஏங்குது, ஏன்?
எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால்!.
உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன், ஏன்?
பூமியாக நீ இருந்தால்!.

உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை, ஏன்?
சூரியனாக நீ, சூரியகாந்தியாக நான்!

கண்ணே, நானே உன்னை அணைப்பேன், ஏன்?
நெருப்பாக நீ, கார்பன்-டை-ஆக்சைடாக நான்.


03.
கறுப்புப் பணம்.
------------------------

பணம் என்ற ஒன்று இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்ட மாற்று முறையே சிறப்பு!.
பருப்பு கொடுத்து புளி வாங்குடா தோழா,
நாட்டில் பட்டினி என்ற சொல் இராது பாரடா..!

வங்கி எண்ணிக்கை குறையும் பணம் போட,
கிடங்கி எண்ணிக்கை உயரும் தானியம் போட.
விளைச்சலால் தானே நாட்டில் எங்கும் பசுமை,
விலைவாசியும் குறையும் என்பது இனிமை.

ஆண்டி ஆவர், ஹவாலா கும்பல் விழிபிதுங்கி,
திவாலாகி போண்டி ஆவர், சுவிஸ் வங்கி !
வெள்ளை, கறுப்பானது கயவர் மடமை,
கறுப்பை,வெளிக்கொணர்வது அரசின் கடமை.!

அன்னிய கடனில் மூழ்கி நிற்கும் டைட்டானிக்,
நம் நாடு நீர்மூழ்கி கப்பலாகி மூச்சு விடுவது,
நல்லவர் சிலர் நாட்டின் தூண்களாய் இருப்பது !
வல்லரசு தேவை, வேண்டும் முதலில் நல்லரசு

பணம் இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்டமாற்று முறையே சிறப்பு!.
விளைச்சல் கொடுத்து பொருளை வாங்குடா நண்பா,
மன உளைச்சல் இன்றி வாழுடா தெம்பா..!

பணம் பத்தும் பேசும்...
பண்டாமாற்று பத்தையும் தாண்டி பேசும்...!
பொருளுக்கு பொருள் தேடி கொடு.
இருளுக்கு வழி சொல்லி விரட்டிவிடு...!கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
 
  திகதி   2012-10-20

[1]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 

 

கருத்துக்கள் (1)சேமித்து வைக்க
AddThis

உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்
Download As PDF

Thursday, February 28, 2013