என் சுவாசம் நீ
மூச்சுக் காற்றாய் நீ, என் இதயத்தை தொட்டாய்,
எல்லையில்லா நம் காதலுக்கு விதை விதைத்தாய்,
காதல் பயிர் வளர கண்களால் உரம் இட்டாய்,
அன்பு மொழி பேசி, நீர் வார்த்தாய்.!
இடையில் தடைகளை களை எடுத்தாய்,
கண்ணுக்கு இமையாக, வேலி அமைத்தாய் ,
பெற்றவர் மனம் அறிய, பேசத் துடித்தாய்,
சாதிப்பூச்சி அகல, பூச்சிக் கொல்லி தேடினாய்.
காலம் கனிந்து, பச்சைக் கொடி காட்டினாய்,
கல்யாணக் களைவந்து முகம் சிவந்தாய்,
பொன்னி நெல் கதிர் போல் தலை குனிந்தாய்,
திருமண நாள், அது அறுவடை நாள்.
-முத்து ரத்தினம்
No comments:
Post a Comment