Sunday, July 10, 2011

EAN ?

ஏன் ?
--------------
முத்து ரத்தினம்
-----------------------------

என் விழியிரண்டும் மூட மறுக்குது , ஏன் ?

என் எதிரில் நீ இருந்தால் !

மூடினாலும் தூக்கம் வர மறுக்குது , ஏன் ?

என் எதிரில் உன் பிம்பம் !.

சாவை கூட என் மனம் ஏங்குது , ஏன் ?

எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால் !.

உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன் , ஏன் ?

பூமியாக நீ இருந்தால் !.

உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை , ஏன் ?

சூரியனாக நீ , சூரியகாந்தியாக நான் !

கண்ணே , நானே உன்னை அனைபபேன் , ஏன் ?

நெருப்பாக நீ , கார்பன்-டை - ஆக்சைடாக நான். !

--------------------------------------------------- Download As PDF

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF

Saturday, July 9, 2011

KACHCHTH THEEVU- THEERVU ENNA ?

கச்சத்தீவு ---தீர்வு என்ன ?
-------------------------------------------------

கச்சத் தீவு பாக்- ஜலசந்தியில் சுமார் முக்கால் சதுர மைலில் அமைந்துள்ள ஒரு தீவு.
இந்திய கடற்கரை எல்லையிலிருந்து பன்னிரண்டரை மைல் தூரத்திலும், இலங்கை
கடற்கரை எல்லையிலிருந்து பத்தரை மைல் தூரத்திலும் உள்ளது.
உயர்திரு.முகம்மது செரீப் , முன்னால் எம்.பி. (பெரியகுளம்) அவர்களால் பார்லிமெண்டில்
1-4-1968 ஆம் ஆண்டு , கச்ச்த் தீவு ராமனாதபுர ராஜாவுக்கு சொந்தமானது தான் என
போதுமான ரெக்கார்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அப்போது உடன் , அரசு விரைந்து செயல்பட்டிருந்தால் ,இண்டர்ணேசனல் கோர்ட்டுக்குச்
சென்றீருதால் நமது பூர்வீகச்சொத்தான கச்ச்த் தீவு நம் வசம் இருந்து இருக்கும்.
ஆயிரக்கனக்கான உயிர் பலியும் கொடுத்திருக்க வேண்டியதில்லை.
இலங்கைக்கு அருகில் இருப்பதால் அது இலங்கைக்கு சொந்தமாகி விடாது. கச்சத்தீவு இந்தியாவின்
பூர்வீக சொத்து .
1) இங்லீஷ் கால்வாய் -இல் மிங்குயர்-என்ரோ என்ற தீவு உள்ளது, அது பிரிட்டீஸ் கடற்கரைக்கு
அதிக தூரத்திலும் ,ஃப்ரன்ச் கடற்கரைக்கு பக்கத்திலும் உள்ளது.
அதனால் ஃப்ரன்ச் அரசாங்கம் தீவு எங்கள் வசம் தான் இருக்க வெண்டும் என இண்டர்ணேசனல்
கோர்ட்டில் மோதியது.
ஆனால் ப்ரிட்டன், தீவு எங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான 1953-ம் வருட டாக்குமெண்டுகள்-
கோர்ட்டில் சமர்பித்தது.
முடிவில் அத்தீவு ப்ரிட்டன் வசம் கிடைத்தது.
2) கிளீப்போர்டன் என்ற தீவு மெக்சிகன் கடற்கரைக்கரைக்கு அருகில் உள்ளது. ஆனால் அது ஃப்ரான்சின்
பூர்வீக சொத்து.
மெக்சிகனும் இண்டர்ணேசனல் கோர்ட்டில் மோதியது.
வெற்றி ஃப்ரான்சுக்குத்தான்.
எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஆனால் இலங்கை ஒப்பந்தப்படி நடக்காமல் மனித உரிமை மீறல் செய்து மீனவர் மீது துப்பாக்கி
சூடு நடத்தியது.

எனவே நாம் நம் வசம் உள்ள ஆதாரங்களூடன் இண்டர்ணேசனல் கோர்ட்டுக்கு சென்றால்
நமது பூர்வீகச் சொத்தான வாலி தீப் என்ற கச்ச்த்தீவு நமக்குத்தான் .
நமது மீனவர்களும் சுதந்த்திரமாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லலாம்..
புதிய அ.தி.மு.க. ஆட்சியும் ,இவ்விசயதில் ஆவன செய்து ,மத்திய அரசை
கலந்து ,பிரச்சனைக்கு முடிவு கட்டும் என நம்புவோம்.

நமது அரசாங்கம் இதற்கு முயற்சி செய்து ,கச்ச்த்தீவை மீட்டு, பல ஆயிரக்கனக்காNA
மீனவர்களீன் உயிரைக் காத்து , இலங்கையின் அட்டாகாசத்திற்கு முடிவு கட்ட ஆவன
செய்ய வேண்டும். Download As PDF

SETHU SAMUTHRA KAALVAAI THITTAM

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம்
----------------------------------------------------------
(முத்து ரத்தினம் )

" சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் ,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "

இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல , நூற்று ஐம்பது ஆண்டு கால
தமிழர்களின் கனவாகும்.

இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய் (canal ) அமைக்கும்
திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A . D . TAYLOR
என்பவர் . ஆண்டு 1860 .

அதற்குப் பிறகு திரு . ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955 - ம் ஆண்டு
திரு . ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து , திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது .

அடுத்தடுத்து ,

1961 - ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் சேது
சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு , பின்னர் கைவிடப்பட்டது .

1968 -ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் அடுத்த
திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது .

1996 - ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம்
திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது .

பிறகு , தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது .

முடிவாக ,

தற்போதைய , தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா , பாக் - ஜலசந்தி வழியாக
சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம் , செயல் ஆக்கத்திற்கு முடிவானது .

இத் திட்டத்தின் பலன்கள்
-----------------------------------------------

இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக
பலன் அடையும் .

வருடந்தோறும் , இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர
கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது .

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும் .

தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர் , நாகப்பட்டினம் , தொண்டி, கொளச்சல் , கன்யாகுமரி
போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும் .

வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள் வந்து கொண்டு
உள்ளன .

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின் படி , சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு -
இலங்கையைச் சுற்றி வருவது குறையும் . நேரமும் கணிசமாகக் குறையும்

இத் திட்டத்தின் பாதகங்கள்
--------------------------------------------

சேது சமுத்திர நவீன திட்டத்தின் படி , கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள்
, அதிக பட்சமாக முப்பதாயிரம் (௩௦௦௦௦) டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும் .

ஆனால் , தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள் , மற்றும் சரக்குகள் எடை
அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன .

இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய வழியில்லை .

உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட்- மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி
ஒன்றை விடுத்துள்ளார் . அதாவது ,

" தற்போதைய சேது சமுத்திர வழி , தெற்கு கேரளாவை ,சுனாமி தாக்கும் அபாயம்
உள்ளது " -என எச்சரித்துள்ளார் ,

தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும்
கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும் , கிட்டத்தட்ட வருடத்திற்கு

150 கோடி ( 1 .5 பில்லியன் ) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் , விலை மதிக்க முடியாத " தோரியம் " - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது .

ஏனென்றால் , நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான " தோரியம் "-
நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும் .

மொத்தத்தில் , முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும் , பாரதி

கண்ட கனவை நினைவாக்க , அரசு ஆவன செய்ய வேண்டும் .

அதுவே , தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம் Download As PDF

VITHI

விதி
------------

1985 -ம ஆண்டு
என்னுடன் மேட்டூர் மில்லில் வேலை பார்த்தவர் குண்டு ராவ் . ஸ்பின்னிங் பகுதியில்
பணியாற்றினார் .
என்னிடம் நன்கு பழகுவார் .
குண்டுராவுக்கு வயது 23 . கம்பனி கொடுத்திருந்த விடுதியில் தங்கி இருந்தார் .
இவருக்கு பூர்வீகம் மைசூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் . பூர்விக சொத்தாக
தோட்டம் ஒன்று உண்டு.
அவ்வப்போது அவருடைய குடும்பத்தை பற்றி பேச்சு வரும் .நானும் என்
குடும்பத்தை பற்றி சொல்வேன்.
இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர் . இவர் தான் கடைக்குட்டி .
இவருடைய சகோதரர்களின் கதையை இவர் கூறும் போது முற்போக்குவாதியான
என்னையே " அந்த விஷயம் " நிலை குலைய வைத்தது .
அடுத்தடுத்து , நடந்த அந்த நிகழ்வுகளை குண்டுராவ் எனக்கு விவரித்தபோது
உடம்பெல்லாம் புல்லரித்தது உண்மை.
அதற்கு அவர் சொன்ன காரணம் " எங்கள் குடும்பத்துக்கு,
" நாக தோஷமாக " இருக்கலாம் "- என்றார்.
அதாவது , இவருடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் ( நான்கு பேரும் )
ஏதாவது ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நாகப் பாம்பு தீண்டி , உயிரைக் காப்பாற்ற
முடியாமல் இறந்து விட்டனர்.
இத்தனைக்கும் இவர்களுடைய அப்பா ,அம்மா சொந்த ஊரிலேயே , தோட்டத்திலேயே
வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் .
அடுத்தடுத்து இடைவெளிவிட்டு , ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும்
அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது
எல்லோருமே கல்யாண வயதிற்கு முன்னமேயே விஷம் தீண்டி இறந்தனர்.
கடைக்குட்டியான குண்டுராவ் ,மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சொந்த
ஊருக்குச் செல்வார் .இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து விட்டு வருவார் .
குண்டுராவின் அப்பா , அம்மாவிற்கு ஏகப்பட்ட வேதனைகள் . வேண்டாத
தெய்வங்கள் இல்லை .
யார் என்ன சொன்னாலும் , எல்லா கோயில்களுக்கும் சென்று பரிகாரம் செய்வார்கள்.
லீவில் குண்டுராவ் வீட்டிற்குச் சென்றாலும், பெற்றோர் அவரை தோட்டத்துப்
பக்கமே அனுப்ப மாட்டார்கள் .இவர் விரும்பினாலும் அப்பா , அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள் .
இருப்பது ஒரு பிள்ளை . இவன் ஒருவனாவது , நமது குடும்பம் தழைக்க
கல்யாணம் செய்து , குழந்தை குட்டிகளுடன் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்கள்
ஒரு நாள் குண்டுராவின் வீட்டிலிருந்து கடிதம் வந்தது .
" வரும் திங்கட் கிழமை நீ கண்டிப்பாக ஊருக்கு வரவும் . உனக்கு பெண் பார்த்திருக்கிறோம்
வந்து பார்த்து விட்டு , உன் விருப்பத்தை தெரிவித்தால் , மேற்கொண்டு ஆவன செய்யலாம் "-
என அப்பா எழுதி இருந்தார் .
குண்டுராவை நாங்கள் எல்லாம் கிண்டல் செய்தோம் . " ஆகா , எங்களுக்கெல்லாம்
மைசூரில் பெரிய பார்ட்டி இருக்கிறது " - என ஆளாளுக்கு நக்கலடிதோம் .
அவருடைய முகத்தில் கல்யாண களை கட்டியிருந்தது .
அந்த நாளும் வந்தது . பெண் பார்க்கும் படலம் முடிந்தது . இவருக்கு பரம திருப்தி .
இவரை விட குண்டுராவின் அம்மாவிற்கு மிக்க சந்தோசம் .
தங்கள் குடும்பம் வாழையடி வழியாகப் போகிறது என பூரிப்பு .
அடுத்த வாரமே கல்யாண நாள் குறித்து , கல்யாண வேளையில் பிசியாக இறங்கி
விட்டார் .
குண்டுராவ் , கம்பனிக்கு ஒரு மாதம் லீவு சொல்லி விட்டார் .
எங்களுக்கு , போன் மூலமாக குண்டுராவ் விஷத்தை சொன்னார் . எல்லோரும் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - சொன்னோம்
மறு நாள் , முக்கிய வேலையாக மிசினில் பிரேக் டவுன் சரி செய்து கொண்டிருந்தேன் .
அப்போது ஒரு எலக்ட்ரிசியன் வந்து அந்த துக்க செய்தியைச் சொன்னான் .
" உங்கள் நண்பர் குண்டுராவ் இறந்துவிட்டதாக கம்பனிக்கு டெலி கிராம் வந்துள்ளது !".
எனக்கு சிறிது நேரம் கண்ணெல்லாம் இருட்டாகி விட்டது மாதிரி தோன்றியது.
அப்படியே ஒரு ஐந்து நிமிஷம் கிழே அமர்ந்து விட்டேன் ,
. பிறகு ஆபிசுக்கு ஓடினேன் .குண்டு ராவின் சக ஆபிசரும் அந்த துக்க செய்தியை உறுதி செய்தார் .
கம்பனியிலிருந்து அவருடைய விட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம் .

நடந்தது இது தான் .
பெண் பார்த்துவிட்டு சென்ற மூன்றாம் நாள் , கல்யாண அழைபிதலை எடுத்துக் கொண்டு
மொபெட் - ல் நண்பர்களுக்கு கல்யாணத்திற்கு அழைக்கச் சென்றிருக்கிறார் .
இத்தனைக்கும் குறைந்த வேகத்திலேயே சென்றிருக்கிறார் .
ஒரு திருப்பத்தில் இவருடைய மொபெட் மீது இவருக்கு எமனாய் வந்த ஒரு லாரி
மோதியதில் பரிதாபமாக அதே இடத்தில இறந்து விட்டார் .
இது என்ன சோதனை ?
குடும்பத்தில் எல்லா சகோதரர்களுக்கும் நிகழ்ந்த மாதிரி நாக தோஷமும் இவருக்கு
ஏற்படவில்லை. குடும்ப வாரிசுகள் அனைவரும் மறைந்தது எதனால் ? ஏன் ?
இன்னும் புலப்படவில்லை !

----------------------------------------------------------------------------- Download As PDF

NILAVIL NAAN

நிலவில் நான் (முத்து ரத்தினம் )
-----------------------------------

எனக்கொரு இடம் வேண்டும் அந்த நிலவில்,

நிற்கக்கூட இடமில்லை இந்த பூமியில் .

தேய் பிறையில் வருவேன் இங்கு விடுமுறையில்,

வளர் பிறையில் செல்வேன் அங்கு இன்பக்களிப்பில்.

பாட்டி வடை சுட்ட கதை ஒன்றுண்டு அந்நாளில் ,

நாயர் டீ கடை உண்டு நிலவில் இந்நாளில் .

நிலாச்சோறு உண்டு மகிழ்வோம் பௌர்ணமியில் ,

மாதமொருமுறை விடுப்பு அவசியம் அமாவாசையில் .

ஜாதி , மத பேதமின்றி அனைவரும் குடியேறுவோம் ,

உலகின் "மாதிரி" சமத்துவபுரம் அங்கு அமைப்போம் .

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இயற்றுவோம் ,

தன்னலமற்ற தலைவர் பலரை உருவாக்குவோம்.

----------------------- Download As PDF

NILAM

நிலம்
---------------
(முத்துரத்தினம் )
--------------------------

என் தாத்தா அந்தக் காலத்தில் பெரிய மிராசுதார் . மாணிக்கம்பாளையம் கிராமத்தில்

அவர் வைத்ததுதான் சட்டம். சுற்றியுள்ள கிராமத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் ஊர்க்கவுண்டர்.

நல்ல குமார கவுண்டர் என்றால் மிகப்பிரபலம் .

அவரிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் சில. அவற்றுள் ஒன்று குதிரையில் பயணம் செய்வது.

பயணம் செய்வது தவறு இல்லை. ஆனால் தினம் ஒரு குதிரை வாங்குவார் .அது தான் தவறு .

அதில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரோடு வரை சென்று திரும்புவார் .

அந்தக் காலத்தில் பேருந்துகள் ஒன்றிரண்டு ஓடினாலும் அவர் பேருந்தில் ஏற மாட்டார் .

பேருந்தை முந்திக்கொண்டு குதிரையில் செல்வார். அதில் அவருக்கு பெருமிதம். யார் கண்டார்கள் ?

ஒரு வேளை என் தாத்தாவுக்கும் , தாத்தா குறுநில மன்னராக இருந்திருப்பார் போலும் .

இப்படி பணத்தை கண்டபடி செலவழிப்பதும், குடிப்பதுமாக இருந்ததால் , இருந்த சொத்துக்கள்

கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தன . கூட இருந்த நண்பர்களும் பணத்துக்காகத்தான்.

என் தாத்தாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி , அவரிடமிருந்த நிலபுலன்களை அபகரித்தனர் பலர்.

இந்தவிதமான என் தாத்தாவின் செயல்களில் என் அம்மாயி ( பாட்டி ) தலையிடக்கூடாது !

அப்படிக்கேட்டால் அடி உதை தான் .

நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் பிள்ளையையும் வைத்துக்கொண்டு , என் அம்மாயி

பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல .

எல்லாச் சொத்துக்களும் போக , கடைசியில் ஓலை வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார் , என் தாத்தா .

இதற்கிடையில் மூத்த இரண்டு பெண் பிள்ளைகளும் கல்யாணமாகி சென்று விட்டிருந்தனர் .

அதாவது என் பெரியம்மாக்கள்.

அடுத்தது என் அம்மா.

என் அம்மாவுக்கும் சுமாரான இடத்தில் , பக்கத்து கிராமமான ஊஞ்சப்பாளையம் என்ற ஊரில்

திருமணம் நடந்தது . கல்யாணத்தை பார்த்த கையோடு என் தாத்தா இறந்து விட்டார் .

என் அப்பா , வேலை தேடி , சொந்த கிராமத்தில் இருந்து , பக்கத்தில் உள்ள மேட்டூருக்குச் சென்று

மில்லில் சேர்ந்து விட்டார் .

ஓரளவு நல்ல வருமானம் . அப்பாவுக்கு என் தாத்தாவின் அதாவது மாமனாரின் நேர் எதிர் குணம் .

என் அம்மாவின் சொல்லை தட்ட மாட்டார் . வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம்

கொடுத்துவிடுவார்.

பிறகு தினசரி செலவுக்கு வாங்கிக் கொள்வார் . சரியான நேரத்திற்கு வேலைக்குச் சென்று

, வேலை முடிந்தவுடன் வீடு திரும்பி விடுவார்.

எனக்குத் தெரிந்து அவர் பார்த்த சினிமாக்கள் மிகக் குறைவு . நல்ல பக்திப்படங்களாக

இருந்தால் பார்ப்பார் .

என் அம்மாவும் , அப்பாவின் சம்பாத்தியத்தில் சிக்கனமாக செலவு செய்து , சீட்டு சேர்த்து

மாடு வளர்த்து பால் ஊற்றி , சேமித்து சொந்த வீடும் கட்டியாகி விட்டது.

இதற்கிடையில் என் அம்மாவே முன்னின்று கடைக்குட்டியான என் சின்னம்மாவிற்கு திருமணம்

நடத்தி வைத்தார். தான் தம்பிக்கும் , படிக்கவைத்து வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.

பிறகு மாமாவிற்கும் திருமணம் நடத்தி , எங்கள் வீட்டுக்கு அருகிலேயே மலிவாய் விலைக்கு வந்த

வீட்டையும் வங்கிக் கொடுத்தார் , என் அம்மா .

அது மட்டுமல்ல, எங்கள் பாட்டியையும் சொந்த கிராமத்திலிருந்து , மேட்டூருக்கு கூட்டி வந்தனர்

என் பெற்றோர் .

இவ்வளவு காரியங்களையும் ,தன் உடன்பிறந்தவர்களுக்கு செய்கிறாளே என் அம்மா என அதிருப்தி

கொண்டது கிடையாது என் அப்பா.

மாமாவையும், என் சின்னம்மாவையும் அவர் மைத்துனன், மைத்துனி என நினைக்காமல் ,

தன் பிள்ளைகளாகவே நினைத்தார்.

இதற்கும் மேலாக என் சின்னம்மாவுடைய மூன்று பிள்ளைப் பெருகளுக்கும் - தாய் வீடாக -

எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து , பிரசவம் முடிந்தவுடன் , ஒவ்வொரு குழந்தைக்கும் டாலர் செயின்

அணிவித்து , திருப்பி புகுந்த வீட்டிற்கு தாயையும் , சேயையும் அனுப்பி வைப்பனர் , என் பெற்றோர் .

என் மாமாவிற்கு , என் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம் . வளர்த்து ஆளாக்கியவராயிற்றே !

தாய் ஸ்தானத்தில் இருந்து அனைத்தும் செய்த அக்கா அல்லவா !

ஊரில் உள்ள நல்லது , கேட்டது அனைத்திற்கும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.

மாமாவும் , அம்மாவைப் போல சிக்கனமாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். வெத்தலை , பாக்கு சில சமயம் போடுவார் .மற்றபடி என் தாத்தாவுக்கு நேர்

எதிர் குணங்கள் .

அம்மாவிற்கும் , மாமாவிற்கும் ரொம்ப நாட்களாகவே ஒரு வைராக்கியம் .

எங்கள் தாத்தா வாழ்ந்த கிராமத்திலேயோ அல்லது அருகிலோ நிலம் வாங்க வேண்டும் என்பதுதான் அது.

அந்த நாளும் வந்தது . மாணிக்கம்பாளையம் அருகில் , செவானூர் கிராமத்தில் மூன்று ஏக்கர்

நிலம் விலைக்கு வந்தது .

சிக்கலான சூழ்நிலையிலும் அம்மாவும், மாமாவும் அந்த இடத்தை விடவில்லை. என் அப்பாவின்

பெயரிலும் , மாமாவின் பெயரிலும் கிரயம் ஆயிற்று

அம்மாவுக்கும் , மாமாவுக்கும் வெற்றிப் பெருமிதம் .

நாங்கள் தோட்டத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் , மாமா மின் வாரியத்தில்

பணி புரிந்ததாலும் , தோட்டத்தை பராமரித்து விவசாயம் செய்ய முடியாதலால் , எங்கள் உறவினர்

ஒருவரிடம் ஒப்படைத்து பராமரித்து வந்தோம் .

நிலத்தில் நெல், கரும்பு , மஞ்சள் என பயிரிட்டு ஓரளவு வருமானமும் வந்து கொண்டிருந்தது .

என் அக்கா , அண்ணன் திருமணம் முடிந்து செட்டிலாகி விட்டார்கள்.

நானும் சொந்தம் போகாமலிருக்க ,என் மாமா பெண்ணையே திருமணம் செய்து இரண்டு

பையன்களும் பிறந்து விட்டார்கள் .

கடந்த சில மாதங்களாக , எங்கள் தோட்டத்தை பராமரித்து வருபவர் , வீட்டிற்கு வரும்

போதெல்லாம் ஒரு புகார் சொல்லிக் கொண்டு போவார் .

அதாவது ," எங்கள் பக்கத்து தோட்டக்காரர் அப்பா -சற்று வயதானவர் -எங்கள் தோட்டத்திற்கும் ,

அவர்கள் தோட்டத்திற்கும் இடையில் உள்ள வயல் வரப்பை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டே

வருகிறார் -"- என்பது தான் அந்த புகாரின் சாராம்சம் .

சில சமயம் மாமாவும் , அம்மாவும் சென்று , எங்கள் உறவினர் சொல்வது சரியா எனப்பர்த்துவிட்டு ,

அவர் சொல்வது சரிதான் என தெரிந்து , பக்கத்து தோட்டக்காரரிடம் சண்டை போட்டு விட்டு திரும்பினர் .

எனக்கும் , என் அண்ணனுக்கும் தெரியப்படுத்தினார்கள் . நாங்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

ஒன்று , நாங்கள் அவரவர் வேளையில் பிசி . இரண்டாவது நாங்கள் உழைத்து , வியர்வை சிந்தி ,

கஷ்டப்பட்டு நிலத்தை வாங்காததினால் வந்த அசிரத்தையா என தெரியவில்லை ,!

எங்கள் உறவினர் , ஒரு நாள் நேராக எங்களிடமே வந்து விட்டார்.

" வர வர பக்கத்து தோட்டக்காரரின் தொல்லை அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக

மண்வெட்டியால் வரப்பை வெட்டி , தற்போது வரப்பில் நடக்கக் கூட முடியாமல் போய் விட்டது.

" உங்கள் அம்மாவிற்கும் , மாமாவிற்கும் வயதாகிவிட்டது, இனிமேல் நீங்கள் தான் பார்க்க

வேண்டும் . நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்களே ! உடனே வந்து ஆவன செய்யுங்கள்.

நான் ஏதாவது கேட்டால் என்னையே அடிக்க வருகிறார்கள் "- என புலம்பினார் .

எனக்கு சரியான கோபம் . மறுநாள் என்ன , ஏது என விசாரிக்க கிளம்பி விட்டேன்.

பொறுமையாகவே , பக்கத்து தோட்டக்காரரிடம் " நீங்கள் செய்வது சரியா " எனக் கேட்டேன்.

அதற்கு, " நீங்களே வாருங்கள் . இங்கு நின்று பாருங்கள் . இந்த எல்லைக்கல்லுக்கும் , கடைசி

எல்லைக்கல்லுக்கும் இடையில் உங்கள் நிலம் வளைந்து செல்கிறது . அதற்காகத்தான்

நாங்கள் வரப்பை வெட்டி நேர் செய்கிறோம் " -என்றார் .

"சரி , நாளை வருகிறேன் " -என அவரிடம் சொல்லி விட்டு ஏன் அம்மா , மாமாவிடம்

இது பற்றி விசாரித்தேன் .

மாமாவிற்கும் , அம்மாவிற்கும் என் மேல் சரியான கோபம் .அது அம்மாவின் பேச்சில்

தெரிந்தது.

" என்னடா , அவர்களை மிரட்டிவிட்டு வாடா என உன்னை அனுப்பினால் , அவர்கள்

சொன்னார்களாம் , இவன் நியாயம் பேச வந்து விட்டான் ."

" நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நிலத்தை வாங்கியிருப்போம் . உனக்கு எப்படித்

தெரியும் ? நாம் நிலத்தை வாங்கி இருபத்து ஐந்து வருடங்களாகி விட்டது . வாங்கியது

வாங்கியபடி , அப்படியே நிலத்தில் வேளாண்மை செய்து கொண்டு இருக்கிறோம் ."

"அவர்கள் , நிலம் வாங்கி ஐந்து வருடங்கள் தான் ஆகிறது . அது பத்தாமல் , நம்

நிலத்தில் வேறு பங்கு கேட்க வந்து விட்டார்களோ ?"

என பொரிந்து தள்ளினார்கள் .

அன்று இரவு எனக்கு தூக்கமே எல்லை. மனதில் பல எண்ண ஓட்டங்கள் .

" மனிதன் பிறக்கும் போது எண்ண கொண்டு வருகிறான் . இறக்கும் போது என்ன உடன் கொண்டு செல்கிறான் "

" யாருக்கும் , யாருடையதும் சொந்தமில்லை . இன்று ஒருவருடைய சொத்து , நாளை வேறு

ஒருவருடைய கைக்கு சென்று விடுகிறது."

"உதாரணமாக , என் தாத்தாவின் சொத்தான நிலங்கள் , இன்று வேறு ஒருவருடைய கையில்.

நாளை யாருடைய கையிலோ ?! யாரறிவர் ?.

" பிறப்புக்கும் ,இறப்புக்கும் இடையில் மனிதன் தனக்கும், தான் சந்ததிக்கும் சொத்துக்காக

ஆளாய்ப் பறக்கிறான் ."

" யாருக்குமே , இது போதும் என்ற மன நிறைவு கிடையாது ."

" பெரிய பணக்காரனிலிருந்து , அன்னக்காவடி வரை நாளைக்காக சேர்த்து வைக்கிறான் ."

" மாறி வரும் இந்த உலகத்தில் எதுவும் , யாருக்கும் நிலையானதல்ல. நேற்று ஒருவர் கையிலும்

இன்று ஒருவர் கையிலும் , நாளை மற்றொருவர் கையிலும் மாறி, மாறி சுழன்று கொண்டே

இருக்கும் ."

" நாம் வாழும் பூமியே சுழன்று கொண்டிருக்கும் பொழுது , அதில் வாழும் நாமும் ஏற்ற ,

இறக்கங்களை , வாழ்க்கையின் மேடு ,பள்ளங்களை சந்த்க்கத்தனே வேண்டும். !"

" நம் உயுருள்ளவரை அனுபவிக்கலாமே தவிர , எந்த பொருளுக்கும் , நாம் சொந்தம்

கொண்டாட முடியாது. "

" உலகத்தில் பெரிய சந்தோசமே , அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான். "

ஒரு தீர்கமான முடிவோடு உறங்கிப்போனேன் .

மறு நாள் நான் மட்டும் தனியாக தோட்டத்திற்குப் போனேன்.

எனக்காக, என் முடிவுக்காக , பக்கத்து தோட்டக்கரரின் குடும்பமே காத்திருந்தது.

என் வயது ஒத்த , பெரியவரின் மகனைக் கூப்பிட்டேன் . அவர் தானே நிலத்தின் சொந்தக்காரர்.

நான் அவரிடம் " உங்களுக்குத்தேவை நம் இருவர் நிலத்திற்கும் இடையில் உள்ள வளைவு

நேராக வேண்டும் . அவ்வளவுதானே , கயிறு கொண்டு வாருங்கள் , நேராகப் பிடிக்கலாம் ."

என்றேன்.

அவர்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் ! சந்தோசம் ! என்னை நன்றிப்

பெருக்கோடு பார்த்தார்கள் .

அதற்குள் பெரியவர் " உங்கள் அம்மா, மாமா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ?- என்றார்.

" அதற்கு நான் உத்திரவாதம் " -என்றேன் .

கயிறு கொண்டு வந்து நேராகப் பிடித்து , பின் வரப்பை அவரையே சரி செய்யச் சொன்னேன் .

வீட்டிற்கு வந்ததும் , நான் எதிபார்த்தபடி என் அண்ணன் , அம்மா , மாமா எவர்களிடம்

வாங்கி கட்டிக்கொண்டேன் .

" நாங்கள் வாங்கும் போது அன்றைய நிலத்தின் மதிப்பு மூன்று ஏக்கருக்கும் சேர்த்து

ரூபாய் அறுபதாயிரம் தான் ."

" இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் இருபது லட்சம் . நீ பாட்டுக்கு இடத்தை

தாரை வார்த்து கொடுத்து விட்டாயே ."

" என்னவோ , நீங்கள் தான் நாளைக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் . இப்படி இருந்தால்

நீ நாளைக்கு உன் குழந்தைகளுக்கு என்ன சேர்த்து வைக்கப் போகிறாய் ? " என்றார் ,என் அம்மா

மாமாவுக்கு என்ன பேசுவது என தயக்கம் . ஒரு வகையில் நான் மருமகனாயிற்றே !

பதிலுக்கு நான் ," அம்மா , நான் செய்தது தவறு எனப் பட்டால் , அந்த நிலத்தில் எனக்காக

வரும் பங்கில் குறைத்து கொள்ளுங்கள். இதனால் நான் தாழ்ந்து விட மாட்டேன்."

கோபமாக சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த சம்பவத்திலிருந்து , எங்கள் தோட்டத்தை பராமரிபவரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை.

இரண்டு மாதங்கள் சென்று இருக்கும் .

ஒரு நாள் தோட்டத்தை பராமரிக்கும் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

பக்கத்துக்கு தோட்டக்காரர் பைக் விபத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்.

எனக்கு இருந்த வேலைச் சுமையில் உடனே சென்று துக்கம் விசாரிக்க முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அவர்கள் வீட்டிற்க்குச் சென்று ,துக்கம் விசாரித்துவிட்டு , எங்கள்

தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தேன் .

அப்போது பக்கத்து தோட்டத்தின் ஒரு மூலையில் , ஒரு சமாதி கட்டி முடியும் தருவாயில்

இருந்தது .அது பக்கத்து தோட்டக்காரரின் சமாதி .,

இரண்டு கொத்தனார்கள் வேலையின் போது பேசிகொண்டிருந்தார்கள்.

" எவ்வளவு ரேட் பேசியிருக்கே ? "

" மொத்தம் பத்து சதுர அடி வருது , ஒரு சதுர அடிக்கு ஐம்பது வீதம் ஐந்நூறு பேசி உள்ளேன் "

பளீரென என் மூலையில் ஒரு மின்னல் .

" அட ! நண்பர் தனக்காகத்தான் இவ்வளவு நாள் போராடி , எங்களிடமிருந்து அந்த

பத்து சதுர அடி நிலத்தைப் பெற்றுக் கொண்டாரா ?!

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தேன் .


------------------------------------------------------------------------------------ Download As PDF