Monday, May 13, 2013
MUTHU RATHINAM IN NEEYA NAANA- VIJAY TV PROGRAM
Friday, March 8, 2013
| வாசல் | கவிஞர்கள் | கவிதைகள் | விமர்சனங்கள் | நேர்காணல்கள் | கட்டுரைகள் |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Thursday, March 7, 2013
Thursday, February 28, 2013
Wednesday, May 2, 2012
தமிழகமும் - இலவசமும்
தமிழகமும் - இலவசமும்
|
|
இலவச மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்தார். அவர் அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவுத் திட்டத்தில், உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தது. அதாவது கல்விக்கு கண் திறந்த காமராஜர், எப்படியாவது அனைவருக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர, ஏழை-எளிய மக்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தாவது, (சாப்பாட்டுக்காவது) பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார்கள் என நினைத்தார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அடுத்து இந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அடுத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் அவர்கள்.
பொதுவாக மக்கள் இலவசத்திற்கு அதிகமாக மயங்குவார்கள் என்று, அரசியல் கட்சிகள் தற்போது மந்திரங்களாக அறிவிக்கும் இலவசத் திட்டங்கள்.
ஒரு கணக்கை பார்ப்போம்.
ஒரு புடவை எடுத்தால், இன்னொன்று இலவசம் என ஒரு கடைக்காரன் விளம்பரப்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம். அங்கே அறியாமை மக்கள் கூட்டம் அலை மோதும். இரண்டு புடவைக்கும் சேர்த்துதான் ஒரு புடவையில் விலையை வைத்து விளம்பரம் செய்கிறான் என அறிவாளி சிந்தித்தானானால், அந்த கடைக்கு எவனும் செல்லமாட்டான்.
இன்னொரு விதமாகவும் சிந்திக்கவேண்டும். இப்படி ஒரு புடவைக்கான உண்மையான விலையையே வைத்து, ஒரு புடவைக்கு இன்னொரு புடவை இலவசம் என்று கொடுத்தால், அந்த கடைக்காரன் ஒரு வாரத்தில் கடையை மூடிவிட்டு போண்டியாகிவிடுவான். இது உண்மை.
சரி, இப்போது அரசியல்வாதிகளின் இலவச திட்டங்களுக்கு வருவோம்.
அது தருகிறோம், இது தருகிறோம் என மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறும் அரசியல்வாதிகளுக்கு பொருட்கள் வாங்க எங்கிருந்து பணம் வருகிறது? மக்கள் வரி பணத்தை மக்களுக்கே இலவசமாக தந்து யாருடைய பணத்தில் இவர்கள் குளிர்காய நினைக்கிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் உள்ளது என இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்கு அயல் நாட்டிடம் எவ்வளவு கடன் உள்ளது என்றுதான் தெரியுமா? யாருடைய பணம் சுவிஸ் வங்கிகளில் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது?
சுவிஸ் வங்கிகளில் உள்ள அரசியல்வாதிகளின் பணத்தை எடுத்தாலே, இந்தியாவின் கடனை அடைத்துவிடலாமே.! அதற்கு ஏதேனும் முயற்சி உண்டா..?! எந்த குடிமகன் கேட்டான்..?! எனக்கு இலவசம் வேண்டும் என்று..!
தன்மானத்தை அடகுவைத்து இலவசங்களை வாங்க தன்மானத் தமிழன் ஒத்துக் கொள்வானா?
கடைசியாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!
மீனை தராதீர்கள். மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.
இலவச படிப்பை தாருங்கள். வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குங்கள்.
சேது சமுத்திர கால்வாய்த் திட்டம
சேது சமுத்திர கால்வாய்த் திட்டம
|
|
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்"
இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல; நூற்று ஐம்பது ஆண்டு கால தமிழர்களின் கனவாகும்.
இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய் (canal) அமைக்கும் திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A D TAYLOR என்பவர். ஆண்டு 1860.
அதற்குப் பிறகு திரு ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955-ம் ஆண்டு திரு ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து, திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது.
அடுத்தடுத்து,
1961-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக, பாக்- ஜலசந்தி மூலம் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.
1968-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் அடுத்த திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது.
1996-ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது.
பிறகு, தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது.
முடிவாக,
தற்போதைய, தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா, பாக்-ஜலசந்தி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம், செயலாக்கத்திற்கு முடிவானது.
இத்திட்டத்தின் பலன்கள்:
இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக பலன் அடையும்.
வருடந்தோறும், இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும்.
தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, கொளச்சல், கன்யாகுமரி போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும்.
வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள் வந்து கொண்டு உள்ளன. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின்படி, சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு - இலங்கையைச் சுற்றி வருவது குறையும். நேரமும் கணிசமாகக் குறையும்.
இத்திட்டத்தின் பாதகங்கள்:
சேது சமுத்திர நவீன திட்டத்தின்படி, கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள், அதிக பட்சமாக முப்பதாயிரம் டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும்.
ஆனால், தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள், மற்றும் சரக்குகள் எடை அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன.
இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய வழியில்லை.
உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட் - மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது,
"தற்போதைய சேது சமுத்திர வழி, தெற்கு கேரளாவை, சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது" - என எச்சரித்துள்ளார்.
தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும், கிட்டத்தட்ட வருடத்திற்கு 150 கோடி (1.5 பில்லியன்) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலை மதிக்க முடியாத "தோரியம்" - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான "தோரியம்"-நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும்.
மொத்தத்தில், முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும், பாரதி கண்ட கனவை நினைவாக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதுவே, தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம்.
Subscribe to:
Posts (Atom)












