Thursday, March 7, 2013

Thursday, February 28, 2013

Wednesday, May 2, 2012

தமிழகமும் - இலவசமும்

தமிழகமும் - இலவசமும்

இன்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக, பல இலவசங்களை தருவதாக வாக்களிக்கின்றனர். முதன் முதலில் தமிழகத்தில் இலவசத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

இலவச மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்தார். அவர் அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவுத் திட்டத்தில், உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தது. அதாவது கல்விக்கு கண் திறந்த காமராஜர், எப்படியாவது அனைவருக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர, ஏழை-எளிய மக்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தாவது, (சாப்பாட்டுக்காவது) பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார்கள் என நினைத்தார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அடுத்து இந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அடுத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் அவர்கள்.

பொதுவாக மக்கள் இலவசத்திற்கு அதிகமாக மயங்குவார்கள் என்று, அரசியல் கட்சிகள் தற்போது மந்திரங்களாக அறிவிக்கும் இலவசத் திட்டங்கள்.

ஒரு கணக்கை பார்ப்போம்.

ஒரு புடவை எடுத்தால், இன்னொன்று இலவசம் என ஒரு கடைக்காரன் விளம்பரப்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம். அங்கே அறியாமை மக்கள் கூட்டம் அலை மோதும். இரண்டு புடவைக்கும் சேர்த்துதான் ஒரு புடவையில் விலையை வைத்து விளம்பரம் செய்கிறான் என அறிவாளி சிந்தித்தானானால், அந்த கடைக்கு எவனும் செல்லமாட்டான்.

இன்னொரு விதமாகவும் சிந்திக்கவேண்டும். இப்படி ஒரு புடவைக்கான உண்மையான விலையையே வைத்து, ஒரு புடவைக்கு இன்னொரு புடவை இலவசம் என்று கொடுத்தால், அந்த கடைக்காரன் ஒரு வாரத்தில் கடையை மூடிவிட்டு போண்டியாகிவிடுவான். இது உண்மை.

சரி, இப்போது அரசியல்வாதிகளின் இலவச திட்டங்களுக்கு வருவோம்.

அது தருகிறோம், இது தருகிறோம் என மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறும் அரசியல்வாதிகளுக்கு பொருட்கள் வாங்க எங்கிருந்து பணம் வருகிறது? மக்கள் வரி பணத்தை மக்களுக்கே இலவசமாக தந்து யாருடைய பணத்தில் இவர்கள் குளிர்காய நினைக்கிறார்கள்?

ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் உள்ளது என இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்கு அயல் நாட்டிடம் எவ்வளவு கடன் உள்ளது என்றுதான் தெரியுமா? யாருடைய பணம் சுவிஸ் வங்கிகளில் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது?

சுவிஸ் வங்கிகளில் உள்ள அரசியல்வாதிகளின் பணத்தை எடுத்தாலே, இந்தியாவின் கடனை அடைத்துவிடலாமே.! அதற்கு ஏதேனும் முயற்சி உண்டா..?! எந்த குடிமகன் கேட்டான்..?! எனக்கு இலவசம் வேண்டும் என்று..!

தன்மானத்தை அடகுவைத்து இலவசங்களை வாங்க தன்மானத் தமிழன் ஒத்துக் கொள்வானா?

கடைசியாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

மீனை தராதீர்கள். மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.

இலவச படிப்பை தாருங்கள். வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குங்கள்.
Download As PDF

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம

"சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்"
              
இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல; நூற்று ஐம்பது ஆண்டு கால தமிழர்களின் கனவாகும்.

இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய்  (canal) அமைக்கும் திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A D TAYLOR என்பவர். ஆண்டு 1860.

அதற்குப் பிறகு திரு ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955-ம் ஆண்டு திரு ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து, திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது.

அடுத்தடுத்து,

1961-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக, பாக்- ஜலசந்தி மூலம் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.

1968-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் அடுத்த திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது.

1996-ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது.

பிறகு, தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது.

முடிவாக,

தற்போதைய, தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா, பாக்-ஜலசந்தி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம், செயலாக்கத்திற்கு முடிவானது.

இத்திட்டத்தின் பலன்கள்:

இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக பலன் அடையும்.

வருடந்தோறும், இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும்.

தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, கொளச்சல், கன்யாகுமரி போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும்.

வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள்  வந்து கொண்டு உள்ளன. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின்படி, சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு - இலங்கையைச் சுற்றி வருவது குறையும்.  நேரமும் கணிசமாகக் குறையும்.

இத்திட்டத்தின் பாதகங்கள்:

சேது சமுத்திர நவீன திட்டத்தின்படி, கால்வாய் வழியாக செல்லும்  கப்பல்கள், அதிக பட்சமாக முப்பதாயிரம் டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும்.

ஆனால், தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள், மற்றும் சரக்குகள் எடை அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து  ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன.

இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய  வழியில்லை.

உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட் - மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது,

"தற்போதைய சேது சமுத்திர வழி, தெற்கு கேரளாவை, சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது" - என எச்சரித்துள்ளார்.

தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும், கிட்டத்தட்ட வருடத்திற்கு 150 கோடி (1.5 பில்லியன்) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலை மதிக்க முடியாத "தோரியம்" - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான "தோரியம்"-நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும்.

மொத்தத்தில், முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும், பாரதி கண்ட கனவை நினைவாக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

அதுவே, தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம். 
Download As PDF

"ஒளி' - மயமான தமிழகம் "

'ஒளி' - மயமான தமிழகம்

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?  இருண்ட தமிழகம் என எதிர்கட்சிகள் குற்றம் கூறுவது எதனால்?

நம்மிடம் போதுமான மின் உற்பத்தி இல்லையா? தேவைக்கு மீறி மின்சாரத்தை நாம் பயன்படுத்துகிறோமா?

இவற்றையெல்லாம் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் தமிழ்நாடு மின் வாரியத்தின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப்  பார்ப்போம்.

1) Gas Turbine Power Stations

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் மேற்கூறிய கேஸ் டர்பைன் மூலம் மின் உற்பத்தி செய்யும் இடங்கள் உள்ளன.

a) பேசின் பிரிட்ஜ் (BBGTPS)
 இதன் உற்பத்தி - 120 MW (மெகாவாட்)

b) குத்தாலம் (GTPP)

இதன் உற்பத்தி - 100 MW

c) வலத்தூர் (Ramnad) (VGTPS)
இதன் உற்பத்தி - 95 MW

d) திருமாகோட்டை (kovilkalappal)
 இதன் உற்பத்தி - 107.88 MW


2) THERMAL - POWER STATION
தமிழ்நாட்டில் நான்கு இடடிங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவை எங்கு, எவ்வளவு மின் உற்பத்தி என பார்ப்போம்.

a) வட சென்னை - NCTPS - 1800mw

b)  எண்ணுர் - ETPS . 1000 mw

c)   மேட்டூர் - MTPS -  800 mw

d)   தூத்துக்குடி - TTPS - 1050 mw



3)  HYDRAO  POWER STATION

தமிழ்நாட்டில் உள்ள ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் மொத்தம் 27 இடங்களில் உள்ளன.

a) சாத்தனூர்  - 7.5 mw

b) மேட்டூர் டர்னல் - 200 mw

c)  மேட்டூர் டேம் - 500 mw

d)  கீழ் மேட்டூர் - 120 mw

e)  பவானி கட்டளை - 30 mw

f)  மறவாகண்டி -  0.75 mw

g) கீழ் பவானி    -  16 mw

h)  மோயார்- 36mw

பைகாரா - 59.2 mw

குந்தா (i+ii+iii)- 60+175+

ஆழியார்  - 60 mw

பூனாச்சி  - 2 mw

காடம்பாறை - 400 mw

வைகை - 6 mw

பைகாரா - 2 mw

முகுர்த்தி - 700 mw

திருமூர்த்தி - 1.95 mw

சர்க்கார்பதி  - 30 mw

சோலையார் - 70 mw

சோலையார்-II  - 25 mw

பெரியார் - 140 mw

சுருளியார்  - 35 mw

சேர்வலார் - 20 mw

பாபநாசம்  - 32 mw

கோதையார் - 60 mw

கோதையார்-II   -   40 mw

பெருஞ்சேரை - 1.30 mw

மேற்கூறிய மின் நிலையங்களில் HYDRO POWER STATION-களில் நீர் இருந்தால்தான் மின் உற்பத்தி ஆக வழி உண்டு.

THERMAL POWER STATION-களில் மூலப் பொருளான COAL-நிலக்கரி இருந்தால்தான் மின் உற்பத்தி ஆகும்.

அது மட்டுமல்லாமல் கரியினால் ஏற்படும் கரியமிலவாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) - சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தும்.

எனவே, NON - CONVENTIONAL  ENERGY எனப்படும் மரபு-சாரா எரிசக்தி மூலம், பின்வரும் சக்திகள் மூலம் மின் உற்பத்தி செய்வது மிக்க நல்லது.

அடுத்து NON-CONVENTIONAL ENERGY SOURCE (NCES) எனும் மரபு சாரா மின் உற்பத்தியைப் பற்றி பார்க்கலாம்.I)  Wind Energy - காற்றாலை

காற்றாலை மின் உற்பத்தி மூலம் 5446.165 mw மின் உற்பத்தி உண்டாகிறது. நம் தமிழ்நாட்டில்.
இது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 45.35% விழுக்காடு ஆகும்.

II) Bio - Mass Energy

இதனை வகையாகப் பிரித்து, மின் உற்பத்தி உண்டாக்கலாம். அவை,

i) Bag asse based congeneration plants

ii) Bio - mass based cogeneration plants

iii) Bio - mass gasifiction based power plants

iv) Municipal solid waste & vegetable based power plant.

Bio-Mass Power Plant மூலம் 2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 139.05 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

co-generation power plant மூலம்  2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 609.9 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


iii) Solar Energy


சோலார் பவர் எனப்படும் இயற்கையிலேயே நமக்கு கிடைம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் முறை சோலார் எனர்ஜி ஆகும்.

சோலார் பவர் மூலம் மின் உற்பத்தி செய்வதில் மற்ற மின் உற்பத்தி திட்டங்களை விட சாலச் சிறந்தது.

ஏனெனில் மற்ற Bio-Mass, co-generation, Thermal Power Plant மூலம் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

ஆனால் சோலார் மின் உற்பத்தியில் சுற்றுச்சூழல் (மாசு) பாதிக்கப்படாமல், பசுமையை காக்கலாம்.

அரசு, தனியார் சோலார் மின் உற்பத்தியாளர்களுக்கு MNRE (Ministry of New and Renewable Energy) ஊக்கத் தொகை மற்றும் உற்பத்தியாகும் மின் சக்திக்கு ரூ.10, ஒரு யூனிட்டுக்கு என அறிவித்துள்ளது.

மேலும், மற்ற மின் உற்பத்திகளில் இல்லாத மிக முக்கியமான உகபோயகமும் சோலார் மின் உற்பத்தியில் உள்ளது.

என்னவெனில், மற்ற மின் திட்டங்களில் மின்சாரத்தை சேமிக்க முடியாது.

ஆனால் சோலார் எனர்ஜி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை Solar Photovoltalc (SPV) செல்கள் மூலம் சேமித்து நேரடியாக DC எனப்படும் Direct Current-க்கு மாற்றலாம்.

சோலார் போட்டோ  வோல்டாக் செல் சேமித்து, வீட்டு மின் உபயோகம், தெரு விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு, மோட்டார் இயக்கம், ரயில்வே சிக்னல் போன்றவற்றிற்கு மின்சாரத்தை பயன்படுத்தலாம்.

இதுவரை தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பற்றி பார்த்தோம். அடுத்து, மேற்கண்ட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் சரியான முறையில் இயங்குகிறதா என பார்க்க வேண்டும்.

நூறு சதவீதம் மேற்சொன்ன அனைத்து நிலையங்களும் இயங்கி, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வருமா என ஆராய வேண்டும்.

மின் உற்பத்தி சாதனங்கள் பழுதுபட்டிருந்தால் உடன் அரசு தலையிட்டு பராமரிப்பு செய்யவேண்டும்.

மேலும் அரசு புதிய பல மின் உற்பத்தித் திட்டங்கள் மேற்கொண்டிருந்தாலும், சோலார் பவர் மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளுக்கு அதிக ஊக்கம் தரவேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மாசு கட்டுப்பாடு மிக முக்கியமான ஒன்று. அதற்கு மேற்சொன்ன மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் வரவேண்டும்.

மிகப்பெரிய, இந்தியாவின் தொழிற்சாலைகள், தங்கள் பயன்பாட்டிற்கென, சொந்தமாக சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிக் கொண்டால், மின்சாரக் கட்டணம் (ஆலை உற்பத்திக்கு கணிசமாகக் குறையும். தொழிற்சாலைகளும் மின் வெட்டிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்.

மேலும் மின் உற்பத்திகாக்கான மூலப் பொருள்களான சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவை இலவசமாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டின் மின் தேவையை Hydro மூலம் 21 சதவீதமும், Thermal மூலம் 29 சதவீதமும். Gas மூலம் 5 சதவீதமும், மத்திய அரசிடமிருந்து 28 சதவீதமும், ipp மூலம் 12 சதவீதமும், மற்ற இதர மின் உற்பத்தி மூலமும் 5 சதவீதமும் - பூர்த்தி செய்து கொள்கிறோம்.

இவற்றில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் (இந்தியாவில்) முன்னணியில் உள்ளது.

"மின் சிக்கனம், தேவை இக்கணம்" - போன்ற வாசகங்கள் அரசிடமிருந்து மக்களுக்குச் சென்றாலும், இன்னும் அதிக பொறுப்புணர்ச்சி வந்தால்தான் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

மின்சாரத்தை சேமித்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு செலவழித்தால்தான், நாடு வளம் பெறும். விலைவாசியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

ஆடம்பர விழாக்கள், தேவையற்ற பொதுக் கூட்டங்கள் இவற்றிற்கு ஆகும் மின் தேவையை குறைத்துக் கொள்ளவேண்டும்.

முக்கியமாக மின் திருட்டை அறவே ஒழிக்கவேண்டும். இலவச மின்சாரம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப் பற்றி பார்த்தோம்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் (NUCLEAR POWER PLANT - ATOMIC POWER PLANT) அணுமின் நிலையங்களைப் பற்றி பார்க்கலாம்.

1) MADRAS NUCLEAR POWER PLANT - கல்பாக்கம்
(2x220MW) இதன் மூலம் 440 MW மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.

2) மேலும், கூடங்குளம் NUCLEAR POWER PLANT - தற்போது நிறுவப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் 2x1000mw உற்பத்தி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Download As PDF

Tuesday, May 1, 2012

'நிலத்தடி நீர் - ஒரு பார்வை'

உலகின் தண்ணீர் தேவையை (நிலத்தடி நீரானது) இருபது சதவீதம் தீர்த்து வைக்கிறது, நிலத்தடி நீர்.  உலகின் நிலத்தடி நீர் எந்த அளவு உள்ளதோ அதே அளவு கிட்டத்தட்ட சுத்தமான நீர் பனிப்பாறைகளிலும், ஐஸ் கட்டிகளாகவும் உள்ளது. வடதுருவம் மற்றும் தென்துருவம் இதில் அடக்கம்.

நிலத்தடி நீரை பெரும்பாலும் நாம் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் பல இடங்களில் குடிநீராகவும் பயன்படுத்துவது (சுத்தப்படுத்தாமல்) அபாயகாரமானது.

ஏனெனில் அதில் 25 சதவீதம் ஆர்செனிக் என்ற நச்சுப் பொருள் கலந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நகரம், அமெரிக்காவில் உள்ள LOVE CANEL (லவ் கேனல்) என்ற இடம்.

1978-ல், அந்நகரத்தில் வாழும் மக்களுக்கு, அவர்களுக்கு குடிநீரால் (நிலத்தடி நீர்) புற்றுநோய் மற்றும் பிறப்பில் ஊனம் கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை கண்டிப்பாக சுத்தப்படுத்தாமல் குடிநீராக பயன்படுத்துவது முறையல்ல.

'சிறு துளி பெருவெள்ளம்' - நாம் அனைவரும் அறிந்த பழமொழி. அதற்கேற்ப நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் நீரை சிக்கனமாக செலவழித்தால் ஒழிய, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

சமீபத்தில் கோவையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பொது மேடையில், ஐந்து லிட்டர் நீரில் குளித்து சாதனைபுரிந்து, நீரின் தேவையை அனைவரம் புரிந்து கொள்ள வலியுறுத்தினார். அவர் தொழில் ஆடு மேய்ப்பது!

அரசாங்கமும் மக்களுக்கு இதுபோன்ற தண்ணீரின் அத்தியாவசியத்தை பற்றி கொண்டு செல்ல வேண்டும்.

தண்ணீர் நமக்கு போதுமான அளவு இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறைதான் நமக்குத் தெரிவதில்லை.

ஐ.நா-வின் கூற்றுப்படி ஒருவருக்கு, ஒரு நாளைக்கு ஐம்பது லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதாவது குடிக்க, சமைக்க, துணி துவைக்க, குளிக்க.  நீர் தேவையை அதிகப்படுத்த, நாம் குறைக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கத்தை!

இவ்விஷயத்தில் நம் அரசாங்கம் பெருமளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, வருமுன் காப்போம் என்ற திட்டத்தின்படி, மழை வருமுன் ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருந்தால், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி நீரை சேமித்து, சுத்தப்படுத்தி உபயோகிக்கலாம்.

ஆனால் நம் தமிழ்நாட்டில் ஏரி-குளங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தற்போது வீடு மற்றும் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

தற்போது ஏரி-குளங்களை பார்க்க முடியவில்லை. மழைக் காலங்களில், அவசரகால நடவடிக்கை மற்றும் போர்க்கால நடவடிக்கை என வந்தபின் கையை பிசைந்து, வேடிக்கை பார்ப்பதைவிட முன்னெச்சரிக்கையாக 'வருமுன் காப்போம்' திட்டத்தை அரசு கவனத்தில் கொண்டால் நல்லது.

நீரை சுத்தப்படுத்தி, உபயோகிக்கும் முறை பல இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

பெரும்பான்மையான நீர் தேவைப்படும் பட்சத்தில் இம்முறை மிக முக்கியமான ஒன்று. இந்தியாவும், சீனாவும் தற்போது இம்முறைக்கு அதிக கவனம் கொண்டுள்ளது வரவேற்கவேண்டியது.

நாம் நீருக்காக (Raw Water) காசு செலவழிக்க வேண்டியது இல்லை. ஆனால் இம்முறைக்கு முதலீடு அதிகம். (Initial Capital)

நதிநீர் இணைப்புக்கு ஆகும் செலவைவிட இது ஒன்றும் அதிகமல்ல. நம் தமிழ்நாட்டில் தண்ணியினால் (Tasmac) வரும் பணத்தை குடி தண்ணீருக்காக உபயோகப்படுத்தலாம். பல இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு!

விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைவர்.

உலகிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் 'JA BELL ALI DESALINATION PLANT' - ஐக்கிய அரபு நாட்டில் உள்ளது.

'INTERNATIONAL DESALINATION ASSOCIATION' - கூற்றுப்படி,  2008 வரை உலகில் 13080 - குடிநீர் சுத்தமாக்கும் நிலையங்கள் உள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 12 மில்லியன் காலன் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது.

கடல் நீரை சுத்தப்படுத்தும் முறை வளர்ந்த் நாடுகளான குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் சவூதி அரேபியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி முறை:

நாம் உகயோகித்த நீரை வீணாக்காமல் சுழற்சி முறையில் (Water Treatment) நீரை சுத்தமாக்கி குடிநீராகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் செலவழிக்கலாம்.

புதிய அறிவியல் நுட்பத்துடன் கூடிய தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

(1) விவசாயத்திற்கு 'Drip Irrigation' - எனப்படும் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தினால் பெருமளவு நீரை சேமிக்கலாம்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் இம்முறையில் Low-Pressure Sprinklers எனப்படும் குறைவான  அழுத்தத்துடன் கூடிய தண்ணீர் ஸ்பிரே செய்யும் முறை குறிப்பிடத்தக்கது.

இனி அசுத்தமான குடிநீரால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

உலக வங்கி, உலகில் 88% நோய்கள் அசுத்தமான குடிநீரால்தான் உண்டாகிறது என வலியுறுத்துகிறது.

அதாவது,

(1) நான்கு பில்லியன் மக்கள் டயாரியா - என்ற நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

(2) 300 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(3) 200 மில்லியன் மக்கள் 'SCHISTOSMIASIS' - என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் தான் அதிகம் என்பது வேதனையான செய்தி.

யுனஸ்கோவின் எச்சரிக்கைப்படி,

வருடத்திற்கு 500 மில்லியன் டன் உலோகங்கள், சால்வன்ட். toxie sludge - தண்ணீருடன் கலக்கிறது. 70 சதவீத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளிலும், ஏரிகளிலும் கலந்து நீரை அசுத்தப்படுத்துகின்றன.

அரசாங்கம் மிக முனைப்புடன் செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
Earth Day Network-ன் விவரப்படி, ஆர்சனிக் (நச்சுப் பொருள்) கலந்த நிலத்தடி நீர் அர்ஜைன்டைனா, பங்களாதேஷ், சிலி, சீனா, இந்தியா, மெக்சிகோ மற்றும் தாய்லாந்து நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 சதவீதம் நிலத்தடி நீரில் பெஸ்டிசைட்ஸ் நச்சுப் பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து ஐம்பது ஆண்டுகளில் உலக மக்கள் தொகை மேலும் 40 சதவீதத்திலிருந்து 50%வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, தொழிற்சாலை மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி என கணக்கெடுத்தால், நீர் தட்டுப்பாடு - தேவை அபாயகரமானதாக இருக்கும்.

நிலத்தடி நீர் பூமிக்கு வெளியே வந்து மட்டும் நமக்கு நன்மை செய்வது மட்டுமல்ல. பூமிக்கு அடியிலும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சில இடங்களில் 50 டிகிரி பாரன்ஹீட் /10 டிகிரி வரை வெப்பம் உள்ள நிலையில் நிலத்தடி நீர் உள்ளது.

நிலத்தடி நீர் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறுவதும் உண்டு.

அதே நேரத்தில் சீதோஷ்ண நிலை மற்றும் பருவகாலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு நிலத்தின் மட்டத்திலிருந்து கீழே செல்வதும் உண்டு.

தண்ணீரை சேமிப்போம்..! வளமாக வாழ்வோம்..!
Download As PDF

Sunday, December 18, 2011

பெரியாறு அணை வரலாறு

பெரியாறுஅணை வரலாறு*


பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி, மேற்கு நோக்கி கேரளாவில்
பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில்
அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது.
தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது.

மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம்,
நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564
வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார்.

1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி
செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப
நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர்
முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர்
ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர்.

பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம்
உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல்
இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி
தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு
தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும்
இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை
நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1807ல் மதுரை கலெக்டர் *ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று
பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட
பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.
1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும்
பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம்
கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர்
ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50
லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.


மேற்குத் தொடர்ச்சி
மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த
பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து
அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண்
அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத்
திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு
தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால்
இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம்
ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த
அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக்
கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின்
அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும்
அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட
முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும்
தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும்
இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம்
109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி
மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி
வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி
ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில்
திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல்
999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.

(அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம்,
லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு
1886 ஆம் ஆண்டு அக்டோ பர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம்
(தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும்
பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக
100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது
உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம்
குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று
கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி,
ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச்
சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன்
பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது.
இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.
இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப்
படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.)

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்
கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு
என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு
அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள
நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான
திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.

எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோ பர்
11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில்
அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக்
தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை
மேற்கொண்டது.

அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை,
திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள்
பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த
மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த
நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன்
குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு
வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி
நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான
ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர்
அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை
போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான்,
புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும்,
வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000
ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார்
2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு
துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை
வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான,
ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும்
மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர்
ஒப்பந்தமும்,

2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல்
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு
ஒப்பந்தமும் ஏற்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல்
உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.

பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி
கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு
கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி
திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது.

குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி
அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு
நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின்
எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன்
மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால
நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின்
அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன்
பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப்
பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள்
அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.

இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள்
பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள்
உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள்,
அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு
நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து
இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில்,
சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார
பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக்
கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில்,
அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு
சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.

நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி
அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம்
அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை
ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் புதிய வடிவம் பெரியாறு அணைக்கு கொடுக்கப்பட்டபின்
முல்லைப்பெரியாறு
அணை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. முல்லை ஆறு மற்றும்பெரியாற்றுக்கு
குறுக்கே கட்டப்பட்டிருப்பதால் "முல்லைப்பெரியாறு அணை" என்று அழைப்பது
1970களில் இருந்து துவங்கியதாக கருதப்படுகிறது.


------------------------
இன்று அன்றாடம் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
உருவெடுத்துள்ளது.
தமிழக ? கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தின் முன்பே அட்ந
டகளை கையிலேந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தர்ணா போராட்டங்கள் செய்வதும்,
அரசியல் தலைவர்கள் ஆய்வு செய்வதாகக் கூறி அணையைச் சுற்றி வருவதும்,
மத்திய அமைச்சர்களே பிரதமரை சந்தித்து கோரிக்கைகள் வைப்பதும் இன்று தொடர்கதையாகி விட்
டது.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், எதிர்க்கட்சியான இடதுசா
ரி கூட்டணியும் ஒருமுகமாக இப் பிரச்சினையை சந்திக்க -
தமிழக அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் பாராமுக மாக தனித்தனியே பிரச்சினையை கையி
லெடுக்க உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் என விவகாரம் வி
ஸ்வரூபமெடுத்துள்ளது.

இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் `பந்த்? ந
டத்த ? போட்டிக்கு தமிழக பகுதிகளில் பெரியார் தி.க. உள்ளிட்ட தமிழர் அமைப்புக்கள் கேரள வாக
னங்களை மறிக்க ? கேரளாவில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளும் என்ன நட
க்குமோ என நடுங்கிப் போய் உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என
யூகிக்க முடியாது; எனவே, கடற்படை தயார் நிலையில் இருப்பதாக துணை அட்மிரல் கே.என். அதில்
குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லை ஏற்பட்டு விடுமோ? எ
ன்ற ஐயம் அனைவருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது.

தினத்தந்தி நாளிதழ் 1-12-2011 அன்று எழுதிய தலையங்கத்தில், ?தென் மாநிலங்களில் இருப்பதுபோல
வலுவான உறவு வடக்கே இருக்காது. இப்போதுதான் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி என்று
ஒரு வித்தியாசமான உணர்வுகள் துளிர் விடத் தொடங்கியுள்ளன;
ஒரு தலைமுறைக்கு முன்னர் திராவிட நாடு என்று பொதுவாகத்தான் எல்லோரும் மனதில் கொண்டிருந்
தோம். தமிழ்த்தாய், கன்னட மாதா, கேரள அம்மா, தெலுங்கு தள்ளி ஆகிய 4 அன்னைகளும் சகோதரி
கள் என்ற பாசஉணர்வு டன் பெரியம்மா சித்தி பிள்ளைகளாகத்தானே காலம் காலமாக வாழ்ந்து வந்தே
஡ம்.

கேரளாவில் கடை வைத்திருக்கும் தமிழர்களை அன்போடு அண்ணாச்சி கடை என்றும், மலையாளிகள்
தமிழ்நாடு குக்கிராமங்களில் கூட வைத்து இருக்கும் டீ கடைகளை சேட்டன் கடை என்று தமிழர்களும்
அன்போடு அழைப்பர்.

இப்போது அந்த அன்பான உறவில் விரிசல் விழும் வகையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை முந
ளத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையை ஒரு பிரச்சினையாக கருதும் முன்னால் அதன் வரலாற்றை
இரு மாநில மக்களும் மதிக்கவில்லையென்றால் அதை கட்டிய தியாகி பென்னிகுயிக் தியாகத்தை மறந்
தவர்களாகி விடுவோம். வரலாறு இரு மாநில மக்களையும் ஒருபோதும் மன்னிக்காது.

ஒரு ராணுவ பொறியாளராக இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி
குயிக். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கிறதே, இதில் ஒரு
அணை கட்டி சேமித்தால் கேரள மக்களும், தமிழக மக்களும் பயன் அடைவார்களே என்ற கருத்தில்
அணை கட்டுவதற்கான முயற்சிகளை பென்னிகுயிக் தொடங்கினார்.

இந்தத் திட்டத்திற்கு பணம் கிடையாது என்று ஆங்கிலேய அரசாங்கம் மறுத்துவிட்ட சூழ்நிலையில்
பென்னிகுயிக் தன் மனைவியின் நகை உட்பட இங்கிலாந்து நாட்டில் உள்ள தன் சொத்துக்கந
ளயெல்லாம் விற்று, அத்துடன் தம் உறவினர்களிடமே பணம் திரட்டி, அந்த மலைப்பகுதியில் கடும் கஷ்ட
ங்களை அனுபவித்து முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.

இந்த அணை வலுவாக இருக்கிறது என்பது தமிழக நிபுணர்களின் வாதம், வலுவில்லை என்பது கேரளா
சொல்லும் வாதம். வாதப்படி வலுவில்லை என்றாலுமே அதை வலுவாக்க நவீன தொழில்நுட்பத்தில் எ
வ்வளவோ வழிகள் இருக்கின்றன.

116 ஆண்டுகளுக்கு முன் முல்லைப் பெரியாறு அணை கட்ட 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டு குத்தந
கக்கு தர திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால் இந்த ஒப்பந்தம் செல்லாது எனவும், இந்த ஒப்பந்தம்
999 வருடங்களுக்கு பொருந்தும் என்றாலும் அதுவரை இந்த அணை நீடிக்காது என்பதும் கேரள அரசு
தரப்பின் வாதம்.

`அணை கட்டு பகுதியில் மீண்டும் மீண்டும் நில நடுக்கம் ஏற்படுகிறது; முல்லைப்பெரியாறு தேக்கடி,
சுருளியாறு ஆகியவற்றை ஒருங்கிணைத்த பகுதியாக உள்ளது, இப் பகுதி நிலநடுக்கம் ஏற்பட வா
ய்ப்புள்ளதாக உள்ளது; அணையை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 5 ரிக்டர் அளவுக்கு மேல் நில
நடுக்கம் ஏற்பட்டால் சேதம் ஏற்படும்? ? என்பது கேரள வல்லுநர்களின் வாதம்.

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; அந்த அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தமிழக
அரசின் வாதம்.

?முல்லைப்பெரியாறு அணை உடையாது; அணை உடைந்தாலும் கேரளத்தில் 4 மாவட்டங்கள் அழிந்துவி
டும் என்ற வாதம் பொய்யானது; அணை உடைந்தாலும் அந்த தண்ணீர் இடுக்கி அணைக்குதான்
செல்லும்;

முல்லைப்பெரியாறு அணை மற்ற அணை போல் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவது
அல்ல. மிகப் பெரிய குழாய்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதாகும் என்பது தமிழக வல்லுநர்க
ளின் வாதம்.

இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் 1979-ம் ஆண்டு கட்
டப்பட்ட தாகும்.

தமிழக ? கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் 1979-ம்
ஆண்டுக்கு முன்பு வரை 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அந்த ஆண்டு இடுக்கியில் நிலநடுக்கம்
ஏற்பட்டதால் அணையின் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக கூறி, 136 அடியாக அது குறைக்க
ப்பட்டது. 1992-ம் ஆண்டு அணையின் நீர் மட்டம் 141.80 அடியாக உயர்ந்து வழிந்தது.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்
கொள்ள அனுமதித்ததோடு 999 ஆண்டு குத்தகை செல்லும் என உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு பி
ப்ரவரியில் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக அரசு மற்றும் அரசியல்ரீதியான வாதப் பிரதிவாதங்களால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த்
தலைமை யில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைத்து, அதில் இருமாநில அரசுகளும் தங்களின் நியா
யங்களை கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழுவில் கேரளாவின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி
தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர்.

இக் குழுவின் இறுதி கட்ட கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாலும் இக் கூட்டம் முடிந்தபின்
குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்பட உள்ளதாலும் இந்த குழு எந்த முடிவும் எடுத்து
விடக்கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற உள்ள பிரவம் தொகுதி இடைத் தேர்தலை முன்வைத்து
அங்குள்ள அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை
கையில் எடுத்துள்ளதாக வும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள முதல்வர் உம்மன்சாண்டி டெல்லியில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்
மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட அனுமதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள பிரதமர் மன்மோக
ன்சிங், `முல்லைப் பெரியாறு விவாகரத்தில் மக்களிடையே தேவை யற்ற பீதியை உருவாக்கும் வகையில்
நடந்து கொள்வதும், பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்? என கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு மாநில உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்தை அமைச்சர்
பவன்குமார் பன்சால் அழைப்பு விடுத்துள்ளார்.

மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க. தலைவருமான டாக்டர் கலைஞர், `கேரள மக்களிடமும் தமிழ்நாட்டு
மக்களிடமும் எந்தவிதமான மனக்குழப்பமும் வராமல் சகோதர ஒற்றுமையோடு இருதரப்பினரும்
செயல்பட வேண்டும்; அதற்கேற்ற வழிவகைகளை நடுநிலையாக நின்று மத்திய அரசு செய்ய வேண்டும்
என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அஹமது, கே.வி. எஸ். தாமஸ் ஆகியோர் தமிழக ? கேரள எ
ம்.பி.க்களை நேரில் சந்தித்து, `முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம்.
சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முல்ந
லப் பெரியாறு அணை விவகாரம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லையாகி விடக்கூடாது. தமிழக கே
ரள மக்கள் என்றும்போல் சகோதரர்களாக வாழ வேண்டும். அந்த அடிப்படையிலேயே இப் பிரச்சினைக்கு
வழி காண வேண்டும் என்பதே நமது விருப்பமும் ? வேண்டுதலுமாகும்
.

---------------MUTHU RATHINAM,
Download As PDF