Wednesday, September 21, 2011

வரிகள் - முரண்பாடுகள்

                   வரிகள் - முரண்பாடுகள்
                                                     -----------------------------------------
   நாம் பல விசயங்களில் அரசாங்கத்தோடு ஒத்துப் போகிறோம் .
 அதில் நாம் செலுத்தும் வரிகளும் ஒன்று.
      இதில் உள்ள முரண்பாடுகளை பார்ப்போம் .
1 )   நாம் சாலை வரி கட்டுகிறோம் , ஏனென்றால் சாலை அமைக்கவும் ,
   சாலை பராமரிப்பு செலவுகளுக்காகவும் , அரசாங்கத்திற்கு பணம்
  தேவைபடுகிறது. அதில் அர்த்தம் உள்ளது.
2 )  நாம் தண்ணீர் வரி கட்டுகிறோம் , ஏனென்றால் தண்ணீரை சுத்தப்படுத்தி ,
      நம் வீட்டு வரை கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு பணம் தேவைப்
    படுகிறது. அதில் அர்த்தம் உள்ளது .
 3 ) நாம் மின்சார வரி கட்டுகிறோம் , ஏனென்றால் மின்சார உற்பத்தி ,
     மற்றும் பராமரிப்பு , நம் வீடு வரை மின்சாரத்தை கொண்டு வர அரசாங்கத்திற்கு
   பணம் தேவைபடுகிறது . அதில் அர்த்தம் உள்ளது.
 4 ) நாம் வீட்டு வரி கட்டுகிறோம் , வீட்டு பட்டா என் பெயரில் உள்ளது .
      வீடு எனக்கு சொந்தம் . அரசாங்கத்திற்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும் ?.
       இதில் அர்த்தம் உள்ளதா ?
 5 ) நாம் விவசாய நில வரி கட்டுகிறோம் . விவசாய நிலம் என் பெயரில் உள்ளது .
      பட்டா என் பெயரில் உள்ளது . நான் ஏன் அரசாங்கத்திற்கு (கந்தாயம் )
     வரி கட்ட வேண்டும் ? இதில் அர்த்தம் உள்ளதா ?
 6 ) நாம் சுதந்திரம் அடைந்து  அறுபது நான்கு ஆண்டுகள் ஆகியும் , ஆங்கிலேயர்
     கட்ட பொம்மனிடம் அநியாய வரி வசூலித்த கதை போல  ,இது உள்ளதா ,இல்லையா ?
 7 )  யாராவது அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி , ஆவன செய்வார்களா ?
     அல்லது  சட்ட ரீதியாக  அணுகி  , இதற்கு வழி காண முடியுமா ?
 
Download As PDF

Thursday, August 11, 2011

என் சுவாசம் நீ


என் சுவாசம் நீ



     மூச்சுக் காற்றாய் நீ, என் இதயத்தை தொட்டாய்,

     எல்லையில்லா நம் காதலுக்கு விதை விதைத்தாய்,

     காதல் பயிர் வளர கண்களால் உரம்  இட்டாய்,

     அன்பு மொழி பேசி, நீர் வார்த்தாய்.!

     இடையில் தடைகளை களை எடுத்தாய்,

     கண்ணுக்கு இமையாக, வேலி அமைத்தாய் ,

     பெற்றவர் மனம் அறிய, பேசத் துடித்தாய்,

     சாதிப்பூச்சி அகல, பூச்சிக் கொல்லி தேடினாய்.

    காலம் கனிந்து, பச்சைக் கொடி காட்டினாய்,

     கல்யாணக் களைவந்து முகம் சிவந்தாய்,

     பொன்னி நெல் கதிர் போல் தலை குனிந்தாய்,

     திருமண  நாள், அது அறுவடை நாள்.


-முத்து ரத்தினம்
Download As PDF

Wednesday, August 3, 2011

திண்ணைப் பள்ளிக்கூடம்.


அன்னை கைப்பிடிக்க, அழுது புரண்டு, வேண்டா வெறுப்பாக
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் புகுந்தேன்..!
கண்ணில் பட்டதோ கையில் பிரம்புடன் பயமுறுத்தும் ஆசிரியை, 
மிரட்சியுடன் அன்னை கைப்பற்றி தரையில் அமர்ந்தேன் நான்...!
  
தினம் தினம் அன்னை பாதுகாப்புடன் பள்ளிக்கு பயணம்
சிலசமயம் எடுப்பேன் ஓட்டம், பின்னால் துரத்தும் கூட்டம்..!
பிரம்புடன் அன்னை, பலபேருக்கு டிமிக்கி, வீட்டில் சிறை
விடிந்ததும் மீண்டும் வழக்கம் போல் திண்ணைப் பள்ளிக்கூடம்..!
 
கழிந்தன காலம், தொடர்ந்தன வகுப்புகள்
மூன்றாம் வகுப்பு, படிப்பில் ஏதோ ஒரு பிடிப்பு !
முதல் மார்க் வாங்க வேண்டும் என துடிப்பு,
கோ-எஜிகேசன் படிப்பு...! அதுவும் ஒரு சிறப்பு..!
 
இன்றும் மனம் அசை போடும், என் பள்ளியைப் பார்த்தால்.!
அன்றைய நினைவுகளும், என் மனதில் தோன்றும் அழியா உருவங்களும்!
முதல் வகுப்பை தொடங்கினேன் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அன்று...! 
முதல் மாணவனாக தேறினேன் பல்கலைக்கழகத் தேர்வில் இன்று..!

அன்னை கைப்பிடிக்க அன்று சென்ற திண்ணைப் பள்ளிக்கூடம்
என்னை மட்டுமின்றி இன்று பலரது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஓடம்..!
வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட திண்ணைப் பள்ளிக்கூடம்..!
வாழும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகிய கலைக்கூடம்..!

-முத்து ரத்தினம்
 திண்ணைப் பள்ளிக்கூடம்.
Aug 03, 2011
Download As PDF

Saturday, July 30, 2011

VELI NAADU SELLA VENDUMAA ?-10

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 10

 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 10
நிறைவு பகுதி

பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.

உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.

உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள்  அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.

ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து  வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.

சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.

அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.

நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.

டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு.

எனவே  பெண்களே உஷார்!
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-9

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 9


 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
நாம் கொடுக்கும் குடும்ப விசாரணை ஏற்கனவே வந்திருக்கும் விசாவுடன் சரிபார்த்து, மனைவி மற்றும் குழந்தைகளின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை செய்வார்கள்.

கடவுச்சீட்டில் முத்திரை செய்யவும், ஏஜென்சிக்கு சர்வீஸ் தொகையாக பணம் தரவேண்டும்.

குடும்ப விசாவுடன் மனைவி, குழந்தைகள் கடவுச்சீட்டுக்கள் கைக்கு கிடைத்தவுடன் விமான பயணச்சீட்டு பெற்று, தேதியை உறுதி செய்யவேண்டும். இவர்கள் நீங்கள் பணிபுரியும் நாட்டில் விமான நிலையத்திற்கு வந்தவுடன், நீங்கள் சென்று, உங்கள் அடையாள (Work Permit) அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பித்து, மனைவி குழந்தைகளை உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வரலாம்.

வாழ்க வளமுடன்!


வேலை  வாய்ப்பு உள்ள தொழில்கள்



வளைகுடா நாடுகளில் அடிப்படை தொழில்கள் தவிர, தொழிற்பயிற்சி முடித்து (I.T.I)  டர்னர், வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உண்டு.

மேற்கத்திய நாடுகளில் ஐ.டி எனப்படும் கணினி தொழிற் சம்பந்தமான வேலைகளுக்கு வாய்ப்பு முதலில் அதிகமாக இருந்தாலும், தற்போது பாதியாக குறைந்து உள்ளது.

டாக்டர், என்ஜீனியர், நர்ஸ் போன்றவர்களுக்கு தங்களுடைய அடிப்படை படிப்புடன் மாஸ்டர்ஸ் டிகிரி (Master's Degree) எனப்படும் கூடுதல் தகுதி, உதாரணமாக MBBS உடன் MS  படிப்பும் இருந்தால் கூடுதல் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.

என்ஜீனியர் படிப்பிலும் கூடுதலாக M.B.A மற்றும் M.E படிப்பு இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது வேலை வாய்ப்பு குறைந்தாலும், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் இன்றும் அதே வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது.

படிப்புடன், வேலைத் திறமையும் இருந்துவிட்டால் போதும் உலகத்தின் எந்த மூலையிலும்  நாம் பெருமையுடன் அதிக வருமானத்துடன் வலம் வரலாம்.

இந்த விஷயத்தில் உலகத்தில் தமிழன் முதல் இடத்தில் இருக்கிறான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கீழ்கண்ட  நிறுவனங்களில் நிரந்தரமாக தொடர்ந்து அதிக வேலை வாய்ப்பு உண்டு என்பது தினசரிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

1. ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்கள்

2. மின்வாரிய கட்டுமான பணிகள்

3. சாலை மற்றும் பில்டிங் கட்டுமான பணிகள்

4. தொழிற்சாலை பணிகள்

5. சேல்ஸ் மேன்

6. ஐ.டி. சம்பந்தமான  பணிகள்

7. மருத்துவமனை பணிகள்

8. பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள்

9. தொலைத் தொடர்பு சம்பந்தமான பணிகள்

10. ஹெவி  டிரைவர் பணிகள்

மேலும் வெளிநாடு வேலைகளுக்கு வரும் அன்பர்கள் முக்கியமா க தெரிந்து கொள்ள வேண்டியது;
 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
Mar 13, 2011
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-8

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8


அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140

நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள,

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in

வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8
Mar 05, 2011
Download As PDF